இந்திய அணி தோனி தலைமையில் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ரசிகர்கள் அதை கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், செப்டம்பர் 25(நாளை) மதியம் 2 மணிக்கு உங்களுக்கு பரபரப்பான செய்தியை சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து தோனி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.