டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தீவிரமாக தயாராகிவருகின்றன.
25
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பும்ரா, ஜடேஜா ஆகிய முன்னணி வீரர்கள் ஆடாதது பின்னடைவு. அதேவேளையில், டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம்.
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்வதால் டி20 உலக கோப்பையை வெல்ல போட்டி மிகக்கடுமையானதாக இருக்கும்.
45
டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், வின்னர், ரன்னர், அரையிறுதியுடன் வெளியேறிய அணிகள் என அனைத்துவிதமான பரிசுத்தொகையை அறிவித்துள்ளது ஐசிசி. டி20 உலக கோப்பையை ஜெயிக்கும் அணிக்கு ரூ.13 கோடி பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபைனலில் தோற்கும் ரன்னர் அணிக்கு ரூ.6.5 கோடியும், அரையிறுதியில் தோற்று வெளியேறும் 2 அணிகளுக்கு ரூ.3.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது. மொத்தமாக ரூ.45 கோடியை பரிசுத்தொகையாக ஐசிசி அறிவித்துள்ளது.