Jay Shah
சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசியின் தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவி காலம் வருகின்ற நவம்பர் மாத இறுதியுடன் முடிவடைய உள்ளது. இதனால் புதிய தலைவரை தேர்வு செய்தவற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது.
Jay Shah
இரண்டு ஆண்டுகள் பதவி காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியை ஒரு நபர் தொடர்ந்து 3 முறை வகிக்கலாம் என்பது விதி. அதன்படி கிரெக் பார்க்லே தொடர்ந்து 2 முறை ஐசிசியின் தலைவராக பொறுப்பு வகித்துள்ளார். மேலும் 3வது முறையாக ஐசிசியின் தலைவராக விருப்பம் இல்லை என்று அறிவித்து விட்டார்.
BCCI
இந்த நிலையில், ஐசிசி தலைவர் பதவிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பதவியில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனுவை தாக்கல் செய்ய வருகின்ற 27ம் தேதி கடைசி நாள் என்பதால் அடுத்த வாரத்திற்குள் ஜெய் ஷா போட்டியிடுவாரா இல்லையா என்பது உறுதியாக தெரிந்துவிடும்.
BCCI
சர்வதேக கிரிக்கெட் வாரியத்தின் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் டிசம்பர் 1ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICC
ஐசிசியில் செல்வாக்கு மிக்கவராக வளம் வரும் ஜெய் ஷா தலைவர் பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு பிற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜெய் ஷா தேர்வாகும் பட்சத்தில் ஐசிசியின் இளம் தலைவர் என்ற சாதனையை படைப்பார்.
முன்னதாக ஜக்மோகன் டால்மியா, சரத் பவார், என்.சீனிவாசன் மற்றும் ஷஷாங் மனோகர் ஆகியோர் ஐசிசியின் தலைவர் பதவியை அலங்கரித்த இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.