பிஸினஸ் சாம்ராஜ்யத்தில் கொடி கட்டி பறக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

First Published | Aug 21, 2024, 2:21 PM IST

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விளையாட்டுத் திறமைக்காக மட்டுமல்ல, வணிகத் உலகில் வெற்றி பெற்றதற்காகவும் அறியப்படுகிறார்கள். விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் போன்ற பிரபலங்கள் பல்வேறு துறைகளில் முதலீடு செய்து தங்கள் வணிக சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகின்றனர்.

Indian Cricketers Business Ventures

கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களின் திறமைகள் பற்றி அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், ஆடுகளத்திற்கு வெளியில் வணிக உலகத்தில் இறங்கிய கிரிக்கெட் வீரர்கள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட் வீரர்கள் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்ட கிரிக்கெட் மட்டுமின்றி பிராண்ட்டுகள், வணிக முதலீடுகள் ஆகியவையும் காரணமாக அமைகின்றன. அப்படி பிஸினஸில் கால் பதித்து டாப்பில் வந்த கிரிக்கெட் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க…

Virat Kohli Business

விராட் கோலி:

கிரிக்கெட்டில் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் இணைந்து தனது பிஸினஸை விரிவுபடுத்தி வருகிறார். கோலி ரேஜ் காபி, ஃபிட்னஸ் சென்டர் சிசல், ப்ளூ ட்ரைப், ஆடை பிராண்ட் WROGN போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

Latest Videos


Sachin Tendulkar Investments

சச்சின் டெண்டுல்கர்:

அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டுகளில் சிறந்தவர் சச்சின் டெண்டுல்கர். மாஸ்டர் பிளாஸ்டர் என்று அழைக்கப்படும் சச்சின் பல்வேறு வணிக நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார். ஸ்மாஷ் என்டர்டெயின்மென்ட், அனாகாடமி, ஸ்மார்ட்ரான், ஸ்பின்னி, ஜெட் சிந்தசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.

Virender Sehwag Business

விரேந்திர சேவாக்:

அதிரடி பேட்டிங்கிற்கு பெயர் போனவர் விரேந்திர சேவாக். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்து வருவதாக சொல்லப்படுகிறது. சேவாக் கிரிக்கெட் அகாடமி மற்றும் கிரிக்கெட் திறமைகளை வளர்ப்பதில் மட்டுமே அவரது கவனம் இருக்கிறது.

Yuvraj Singh Investments

யுவராஜ் சிங்: இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆஸ்தான் குருவான இருக்கிறார். ஐபிஎல் கிரிகெட்டில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த அபிஷேக் சர்மாவிற்கு பயிற்சி அளித்திருக்கிறார். அவர் YouWeCan என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை நிறுவினார். உடற்பயிற்சி பிராண்டான Sports365 இன் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni Business

எம்.எஸ்.தோனி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஏராளமான பிஸினஸில் இறங்கியிருக்கிறார். கார்ஸ்24, கருடா ஏரோஸ்பேஸ், உடற்பயிற்சி ஸ்டார்ட் அப், டாக்டா ரஹோ, கதாபுக், சென்னையின் எஃப்சி, ஹோட்டல் மஹி ரெசிடென்சி, ஸ்போர்ட்ஸ்பிட், எம்.எஸ்.தோனி கார்24, ஹோம்லென், 7இங்க் பிரேவ்ஸ் பிரைவேட் லிமிடெட் என்று பல நிறுவனங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகிறார். இவ்வளவு ஏன், தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். இதன் மூலமாக தமிழ் படங்களை தயாரித்து வருகிறார்.

click me!