ICC WTC: இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா..! இந்திய அணிக்கு சிக்கல்

First Published | Mar 3, 2023, 11:56 AM IST

இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.  3வது டெஸ்ட்டில் தோற்ற இந்திய அணி, கடைசி டெஸ்ட்டில் ஜெயித்தால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஃபைனலுக்கு முன்னேறிவிடலாம். கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி தோற்றால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். 
 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கியதும், முதல் முறையாக கோப்பையை வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்தது. 2019-2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணியை வீழ்த்தி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன் ஆனது.
 

2021-2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்கள் நடந்துவருகின்றன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதும். வெற்றி சதவிகித அடிப்படையில் அணிகள் புள்ளி பட்டியலில் இடங்களை பிடிக்கும்.

IND vs AUS: 3வது டெஸ்ட்டில் இந்திய அணியை ஈசியா வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி.. ஆட்டநாயகன் நேதன் லயன்
 

Tap to resize

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி 66.67 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், இந்திய அணி 64.06 சதவிகிதத்துடன் 2ம் இடத்திலும் இருந்தன. இந்தூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் வெற்றி விகிதம் 68.52 சதவிகிதமாக உயர்ந்தது. எனவே ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி தோற்றால் கூட அதன் வெற்றி விகிதம் 64 சதவிகிதத்தில் இருக்கும். அதனால் ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது.
 

ஆனால் இந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் வெற்றி விகிதம் 60.29 சதவிகிதமாக குறைந்துவிட்டது. இந்திய அணி  டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருந்தாலும், அகமதாபாத்தில் நடக்கும் 3வது டெஸ்ட்டில் இந்திய அணி கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். கடைசி டெஸ்ட்டில் ஜெயித்தால் தான் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

புஜாராவை அவுட்டாக்கியது நேதன் லயன் இல்ல; ரோஹித் சர்மா தான்..! இந்தியா தோற்றால் நீங்கதான் காரணம் ரோஹித்

கடைசி டெஸ்ட்டில் தோற்றாலும் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறலாம். ஆனால் அது இலங்கை அணி கையில் உள்ளது. 53.33 என்ற சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 3ம் இடத்தில் இருக்கும் இலங்கை அணி, நியூசிலாந்துக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. அந்த தொடரை 2-0 என இலங்கை ஜெயித்து, இந்திய அணி கடைசி டெஸ்ட்டில் தோற்றால் இலங்கை ஃபைனலுக்கு முன்னேறிவிடும். ஆஸி.,க்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணியும் தோற்று, இலங்கை அணி நியூசி.,க்கு எதிரான 2 டெஸ்ட்டில் ஒன்றில் தோற்றாலும் இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேறிவிடும்.

ஏம்ப்பா ரோஹித், உனக்கு அறிவு இருக்கா இல்லையா..? ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கிழி கிழினு கிழித்த கவாஸ்கர்

Latest Videos

click me!