கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு அர்ஜுனை மும்பை அணி விடுவித்தாலும், ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு மீண்டும் வாங்கியது. ஆனால், கடந்த ஆண்டு ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை மும்பை உட்பட எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. பின்னர், லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மொஹ்சின் கான் காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக ஷர்துல் லக்னோ அணியில் சேர்க்கப்பட்டார்.
ரஞ்சியில் மும்பை கேப்டன்
லக்னோவுக்காக 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல், இந்த ரஞ்சி சீசனில் மும்பை அணியின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரஞ்சி டிராபியில் மும்பை அணியில் வாய்ப்பு கிடைக்காததாலும், எதிர்பார்ப்புகளின் அழுத்தம் காரணமாகவும் அர்ஜுன் இரண்டு சீசன்களுக்கு முன்பு கோவா அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்தார்.