இதற்குப் பிறகு, கர்நாடக மாநில அரசும், பிசிசிஐ-யும் சின்னசாமி ஸ்டேடியத்தில் பெரிய தொடர்களை நடத்த அனுமதி மறுத்து வருகின்றன. இங்கு நடைபெறவிருந்த ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
சில ஊடக அறிக்கைகளின்படி, இனி சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகள் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தை மாற்றும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.
ஆர்சிபிக்கு வந்த ஆஃபர்
சின்னசாமி ஸ்டேடியம் சர்ச்சைக்கிடையே, மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒரு ஓபன் ஆஃபர் கொடுத்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, 2026 ஐபிஎல் தொடரில் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தை தங்களது ஹோம் கிரவுண்டாக பயன்படுத்திக்கொள்ள ஆர்சிபி-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்சிபி மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்திற்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.