49 ஆண்டு கால சாதனையை தகர்த்த'குட்டி' ஷமி! இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அலற விட்ட ஆகாஷ் தீப்!

Published : Jul 06, 2025, 11:41 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய ஆகாஷ் தீப் 49 ஆண்டு கால சாதனையை தகர்த்துள்ளார்.

PREV
14
IND vs ENG Test: Akash Deep Broke 49-year Old Record In Test cricket

பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 427/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.

24
ஆட்டநாயகன் கேப்டன் சுப்மன் கில்

இதனால் 608 என்ற இமாலய இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 68 ஓவரில் 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் முதன் முறையாக வெற்றியை ருசித்துள்ளது. முதல் இன்னிங்சில் இரட்டை சதம் (269 ரன்கள்), 2வது இன்னிங்சில் சதம் (161 ரன்) விளாசிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.

34
ஆகாஷ் தீப் 10 விக்கெட்

இந்திய அணி பாஸ்ட் பவுலர் ஆகாஷ் தீப் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளும், 2 இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் என மொத்தம் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆகாஷ் தீப் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகளும் வீழ்த்துவது இதுவே முதன் முறையாகும். மற்றொரு பவுலர் முகமது சிராஜ் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

ஆகாஷ் தீப் பெரும் சாதனை

இங்கிலாந்து மண்ணில் களம் கண்ட முதல் டெஸ்ட் போட்டியிலேயே 10 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் தீப் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். குறிப்பாக அவர் 49 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் நான்கு பேரை (பென் டக்கெட், ஜோ ரூட், ஆலி போப் மற்றும் ஹாரி புரூக்) ஆகியோரை ஒரே இன்னிங்ஸில் அவுட்டாக்கிய‌ முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றுள்ளார்.

44
சிறந்த இந்திய பவுலர்

மைக்கேல் ஹோல்டிங் 1976ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் முதல் 4 பேட்ஸ்மேன்களை அவுட்டாகியிருந்த நிலையில், ஆகாஷ் தீப் அவரது சாதனையை முறியடித்துள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்து வீசிய முதல் இந்திய பந்துவீச்சாளர் (187/10) என்ற பெருமையை ஆகாஷ் தீப் பெற்றார். 

முன்னாள் வீரர் சேத்தன் சர்மாவின் 10/188 சிறந்த பவுலிங்கை ஆகாஷ் தீப் முறியடித்துள்ளார். முகமது ஷமி போன்று பந்துவீசுவதால் 'குட்டி' ஷமி என அழைக்கப்படும் ஆகாஷ் தீப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories