147 ஆண்டுகளில் முதல் முறை: வெறும் 58 ரன்களில் கோலி படைக்க உள்ள இமாலய சாதனை

First Published | Sep 12, 2024, 9:22 PM IST

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி வருகின்ற 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் 58 ரன்களை அவர் கடக்கும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய இமாலய சாதனையை படைப்பார்.

Virat Kohli

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகின்ற 19ம் தேதி தொடங்குகிறது. டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்திய ரசிகர்களின் பார்வை கோலியின் மீது உள்ளது. ஏனெனில் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளைப் படைத்துள்ள நிலையில், மேலும் சில சாதனைகளை அடையும் தொலைவில் உள்ளார்.

Virat Kohli

கிரிக்கெட்டை பொருத்தமட்டில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இடையே பெரும்பாலும் ஒப்பீடுகள் வரையப்பட்டிருக்கின்றன. விராட் கோலி 80 சர்வதேச சதங்களை அடித்துள்ள நிலையில், சதங்களின் எண்ணிக்கையில் டெண்டுல்கருக்கு (100) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Latest Videos


Virat Kohli

அந்த சாதனையை முறியடிக்க சிறிது நேரம் ஆகலாம் என்றாலும், வங்கதேச டெஸ்ட் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் டெண்டுல்கரின் சாதனையை கோலி முறியடிக்க முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடக்க விராட் கோலிக்கு 58 ரன்கள் தேவை. 

Virat Kohli

சர்வதேச கிரிக்கெட்டில் 623 இன்னிங்ஸ்களில் (226 டெஸ்ட் இன்னிங்ஸ், 396 ஒருநாள் இன்னிங்ஸ், 1 டி20 இன்னிங்ஸ்) 27,000 ரன்களை மிக வேகமாக எட்டிய வீரர் என்ற பெருமையை சச்சின் தன்னிடம் வைத்துள்ளார். விராட் கோலி இதுவரை 591 இன்னிங்ஸ்களில் விளையாடி 26,942 ரன்கள் எடுத்துள்ளார். கோலி தனது அடுத்த எட்டு இன்னிங்ஸ்களில் மேலும் 58 ரன்கள் எடுத்தால் புதிய சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது. 147 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 600 இன்னிங்ஸ்களுக்குள் 27,000 ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் ஆவார்.

Virat Kohli

இதுவரை, டெண்டுல்கரைத் தவிர, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையின் குமார் சங்கக்கார ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்களுக்கு மேல் எடுத்து உள்ளனர்.

click me!