கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை டிராபி வென்ற கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். ஐபிஎல் வரலாற்றில் ஒட்டு மொத்தமாக 17 சீசன்களில் விளையாடிய ரோகித் சர்மா 178.6 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறார்.
இன்சைட் ஸ்போர்ட் நடத்திய அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் தொடர் மூலமாக அதிகளவில் சம்பாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட மொத்தமாக 6,628 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 15 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். அதிகபட்சமாக 109* ரன்கள் எடுத்திருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹிட்மேன் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக 165 போட்டிகளில் விளையாடி சராசரி 28.62 உடன் 4,236 ரன்கள் எடுத்துள்ளார்.