கனகாவை அசிங்க அசிங்கமா திட்டுவார்! அவரின் நிலைக்கு காரணமே இதுதான்? யாருக்கும் தெரியாத ரகசியத்தை கூறிய பிரபலம்!

நடிகை கனகாவின் தற்போதைய நிலை குறித்து, பிரபல பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் பலருக்கும் தெரியாத விஷயத்தை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

வாரிசு நடிகை என்கிற அடையாளத்துடன், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தன்னுடைய முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் வெற்றியை, தமிழ் சினிமாவில் பதிவு செய்தவர் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளான கனகா.

இவர் பிரபல இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன் எழுதிய - இயக்கிய 'கரகாட்டக்காரன்' படத்தில், நடிகர் ராமராஜனுக்கு ஜோடியாக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. மேலும் தற்போது வரை இப்படத்தில் செந்தில் - கவுண்டமணியின் காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். அதேபோல் ராமராஜன் - கனகாவின் காம்பினேஷன் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து அதே வருடம் (1989) ஆம் ஆண்டு வெளியான 'தங்கமான ராசா' படத்திலும் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

என்ன நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க! பிக்பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- பொண்ணு யார் தெரியுமா


தன்னுடைய அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் கனகாவை முன்னணி நடிகையாக மாறினார். 1990 ஆம் ஆண்டு மட்டும், இவர் நடிப்பில் சுமார் 11 படங்கள் வெளியாகின. அந்த அளவுக்கு ஓய்வில் இல்லாமல் நடித்து வந்தார். 1998 வரை மிகவும் பிசியாக நடித்து வந்த கனகா, திடீரென தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, போன்ற தென்னிந்திய மொழிகளிலும் கனகா முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தமிழில் கடைசியாக 1999 ஆம் ஆண்டு வெளியான, 'விரலுக்கேத்த வீக்கம்' என்கிற படத்தில் நடிகர் விவேக் ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் திரையுலகை விட்டு காணாமல் போன கனகா பற்றி பல வதந்திகள் தமிழ் சினிமாவில் பரவியது. தற்போது ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தன்னந்தனியாக வாழ்ந்து வரும் கனகாவுக்கு, ஒரே ஒரு உதவியாளர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. மற்றபடி அவர் என்ன செய்கிறார், எப்போது சாப்பிடுகிறார், எப்போது வெளியில் செல்வார் என்பது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு கூட தெரியாதாம். 

செம்ம கியூட்! பிறந்து ஒரு மாதம் கூட ஆகாத இரண்டாவது குழந்தையின் போட்டோ ஷூட்டை வெளியிட்ட ஸ்ரீதேவி அசோக்!

கனகா பற்றி அறிந்து கொள்வதில் பல ரசிகர்கள் ஆர்வம் காட்டிய நிலையில், திடீரென கடந்தாண்டு நடிகை குட்டி பத்மினி கனகாவை சந்திக்க சென்றார். அப்போது ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். இவரின் சமீபத்திய புகைப்படம் இது கனகாவா என கேட்கும் அளவுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆளே அடையாளமே மாறி இருந்தார் கனகா. மேலும் விரைவில் தன்னுடைய யூடியூப் சேனலுக்கு கனகா பேட்டி கொடுப்பதாக கூறியதாக குட்டி பத்மினி தெரிவித்த நிலையில், பின்னர் அவர் தன்னுடைய போனை கூட எடுப்பதில்லை. அவர் மற்றவர்களை நம்ப பயப்படுகிறார் என்பது அவரின் செயல்களில் இருந்தே தெரிகிறது என கூறி இருந்தார்.

இது ஒருபுறம் இருக்க கனகா குறித்து பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் இதுவரை யாரும் கூறாத அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார். கனகாவின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் அவருடைய அப்பாவும் அம்மாவும் தான் என தெரிவித்துள்ள சபிதா ஜோசப், கனகாவை அவரது அப்பா கெட்ட வார்த்தைகளால் கனகாவை திட்டுவார். பதிலுக்கு கனகாவும் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பச்சை பச்சையாக பேசுவார் என கூறியுள்ளார்.

பிரேம்ஜிக்கும் அவர் மாமியாருக்கும் ஒரே வயசு! 1000 சவரன் எல்லாம் உட்டாலக்கடியா? இந்துவின் பின்னணி இதுதான்!
 

Actress Kanaka

மேலும் கனவின் அம்மா தேவிகா, ஷூட்டிங் முடிந்து கனகா எங்கேயும் செல்லக்கூடாது என ஏகப்பட்ட கண்டிஷன்கள் போட்டு நெருக்கடி கொடுத்தார். இதுவே அவரது மன அழுத்தத்திற்கு காரணமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய கனகா, பின்னர் ஆண்கள் என்றாலே தன்னுடைய அப்பா போல் தான் இருப்பார்கள் என்கிற எண்ணத்தால், திருமணமே செய்து கொள்ளவில்லை. தனிமையிலேயே இருந்த கனகாவின் நிலை அவரின் அம்மா மறைவுக்கு பின்னர் மிகவும் மோசமாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.
 

ஒரு படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டாலே... நடிகை பலர் வெளிநாடுகளுக்கு அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், இப்படி பல நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்தது தான் இவரின் மனஅழுத்தத்திற்கு காரணமாக இருக்கும் என ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை ஒருபுறம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!