- Home
- Gallery
- என்ன நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க! பிக்பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- பொண்ணு யார் தெரியுமா
என்ன நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க! பிக்பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- பொண்ணு யார் தெரியுமா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன பிரதீப் ஆண்டனி தன்னுடைய நீண்ட நாள் காதலியை விரைவில் கரம்பிடிக்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.

Pradeep Antony
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் தான் பிரதீப் ஆண்டனி. நடந்த முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் டைட்டில் வின்னரான அர்ச்சனாவுக்கு கிடைத்த பெயரையும் புகழையும் விட பிரதீப்புக்கு தான் அதிக அளவு பாப்புலாரிட்டி கிடைத்தது. இத்தனை அவர் நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். அவர் மீது பெண்கள் புகார் அளித்ததன் பேரில் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல்ஹாசன்.
BiggBoss Pradeep Antony
பிக்பாஸ் வீட்டில் பிரதீப் ஆண்டனி இருந்தவரை அவர் தான் டைட்டில் வின்னர் என்கிற அளவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரை எப்படியாவது வெளியேற்ற முடிவெடுத்த மாயா மற்றும் பூர்ணிமா கேங், அவரால் அந்த வீட்டில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் எழுப்பினர். அதன்காரணமாக பிரதீப் மீது ஆக்ஷன் எடுத்த பிக்பாஸ் டீம் அவரை நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேற்றியது.
இதையும் படியுங்கள்... செம க்யூட்.. முதன்முறையாக தனது மகளின் முகத்தை பகிர்ந்த ராம்சரண்.. வைரல் போட்டோவை பார்த்தீங்களா?
Pradeep Antony lover
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் பிரதீப் ஆண்டனியை வைத்து தான் பிக்பாஸ் கேமே நடந்தது. அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசியதால் அர்ச்சனாவுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதுவே அவர் டைட்டில் ஜெயிக்கவும் முக்கிய காரணமாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதீப் ஆண்டனி சினிமாவில் வாய்ப்புக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. விரைவில் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அவரே கூறி இருந்தார்.
Pradeep Antony Engagement
இந்நிலையில், பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலியை விரைவில் கரம்பிடிக்க இருக்கிறார். இருவருக்கும் எளிமையான முறையில் நடைபெற்ற நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள பிரதீப், எனக்கெல்லாம் நடக்காதுனு நினைச்சேன், பரவாயில்ல என்ன நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க. 90ஸ் கிட்ஸ் சோதனைகள் என பதிவிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிரதீப்புக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரஜினி மட்டுமில்ல... கமல்ஹாசனுக்கும் மகளாக நடித்திருக்கும் மீனா... இது எப்ப! பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்