Parenting Tips : குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்க இந்த 3 விஷயங்களை மட்டும் செய்தால் போதும்!

First Published | Jun 17, 2024, 11:12 AM IST

நீங்கள் உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைக்க விரும்பினால், சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை

பெற்றோரான பிறகு, சில தம்பதிகள் பொறுப்புகள் அதிகமாகிவிட்டது என்று நினைக்கிறார்கள். குறிப்பாக, அவர்களை நல்ல முறையில் வளர வேண்டும் என்று நினைத்து அவர்களை ரொம்பவே கட்டுப்பாடாக வளர்க்கிறார்கள்.

அவர்கள் வெளியில் விளையாட சில விரும்பினாலும் கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. எங்க போகாது அங்க போகாது என்று அவர்கள் ரொம்பவே கட்டுப்பாடாக வளர்க்கிறார்கள் இதனால் குழந்தைகளின், சந்தோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது. உங்கள் குழந்தைகளை எப்போது மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், இவற்றை உடனே செய்யுங்கள்.

Tap to resize

பாசமாக இருங்கள்: உங்கள் குழந்தை மகிழ்ச்சியாக இருக்க விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பதை காட்டிலும், அவர்களிடம் அன்பாக பாசமாக இருங்கள். குழந்தைகள் இதை தான் பெற்றோர்களிடம் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். இதற்கு நீங்கள், அவர்கள் செய்த விஷயத்தை பாராட்டும் விதமாக அன்பாக கட்டிப்பிடியுங்கள், முத்தம் கொடுங்கள். இதனால், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணருகிறார்கள்.

இதையும் படிங்க:  Nita Ambani Parenting Tips : நீதா அம்பானி ஸ்டைலில் நீங்களும் உங்களை குழந்தையை இப்படி வளங்க..!

ஒன்றாக நேரத்தை செலவிடுங்கள்: இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தை இடம் நேரத்தை செலவிட முடிவதில்லை. இதனால் அவர்கள் தனிமையை உணர்கிறார்கள். எனவே, முடிந்தவரை வாரத்திற்கு ஒருமுறை குழந்தையை வெளியிடத்திற்கு அழைத்து சென்று அவர்களை சந்தோஷப்படுத்துங்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : உங்கள் குழந்தை நல்ல முறையில் வளர பெற்றோர்கள் செய்ய வேண்டிய முதல் 5 விஷயங்கள்!

அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்: குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் ஏதாவது சொல்வரும் போது (அ) பேச வரும்போது பல பெற்றோர்கள் இதை கேட்பதே இல்லை. சில சமயங்களில் அவர்களிடம் கோபப்படுகிறார்கள். இதனால் குழந்தைகள் மனதளவில் புண்படுகிறார்கள். ஆனால், நீங்கள் உங்கள் குழந்தை சொல்வதை கேட்டால் அவர்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக அடைகிறார்கள் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!