Vadivelu: விஜயகாந்த் மீது பயம்! நம்ப வைத்து மோசம் செய்த வடிவேலு... என் மகன் வாழ்க்கையே போச்சு! கதறிய பிரபலம்!

First Published | Jun 15, 2024, 3:00 PM IST

பிரபல தயாரிப்பாளர் தன்னை வடிவேலு நம்ப  வைத்து ஏமாற்றி விட்டதாகவும், இதனால் தன்னுடைய மகனின் திரையுலக வாழ்க்கையே போச்சு என பேட்டி ஒன்றில் ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
 

தமிழ் சினிமாவில் திறமை இருந்தால் யாராலும் உயர முடியும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணமாக இருப்பவர் காமெடி நடிகர் வைகைப்புயல் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்படும் பிரபலமாக இருந்து வருகிறார். இவர் இல்லாத மீம்ஸ்களே இருக்க முடியாது என கூறலாம் அந்த அளவுக்கு இவரின் முக பாவனை மற்றும் பாடி லாங்குவேஜ் ரொம்ப பிரபலம்

தன்னுடைய ஈடு இணையற்ற காமெடி திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து, சினிமாவில் உச்சம் தொட்ட வடிவேலு... தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் பற்றி எடக்கு மடக்காக பேசி சிக்கினார். மேலும் இவர் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின்' இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர் ஷங்கருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, இவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

Maharaja Day 1 Collection: மகாராஜாவாக மகுடம் சூடினாரா விஜய் சேதுபதி? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!
 

Tap to resize

இதனால் சுமார் 10 ஆண்டுகள் வரை வடிவேலு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தான் தயாரிப்பாளர் வி சேகர் தன்னுடைய மகன் விவேக் என்பவரை வைத்து, ஒரு படத்தை இயக்கி தயாரிக்க முடிவு செய்திருந்தார். 'சரவணப் பொய்கை' என்று பெயரிடப்பட்ட இந்த படம் குறித்து வடிவேலுவிடம் கூறியபோது, அவர் கண்டிப்பாக நடிக்கிறேன் என கூறி கையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக பேசியுள்ளார்.

வடிவேலுவின் பேச்சை நம்பி படத்தின் பணிகளை துவங்கிய வி சேகர், படப்பிடிப்பு துவங்கும் சமயத்தில் வடிவேலுவை அழைக்க, விஜயகாந்த் பற்றி வாய்யை விட்டதால்... பயந்து கொண்டு அவர் எந்த படத்திலும் நடிக்காமல், மதுரையை விட்டு வரவே இல்லையாம். வடிவேலுவின் பேச்சை கேட்டு மோசம் போனதை உணர்ந்த தயாரிப்பாளர் வி சேகர், வேறு ஒரு காமெடி நடிகரை வைத்து அந்த படத்தை இயக்கி முடித்தாராம்.

மாடர்ன் கவுன் அணிந்த ரெட் ரோஸாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்! ஆடையை காற்றில் பறக்க விட்டு அசத்தல் போட்டோ ஷூட்!

எனினும் வடிவேலு அந்த படத்தில் நடித்திருந்தால்... இன்னும் நன்றாக அப்படம் வந்திருக்கும். தன்னுடைய மகனுக்கும் திரையுலகில் அது ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்திருக்கும். என தன்னுடைய ஆதங்கத்தை பேட்டி ஒன்றில் கொட்டி தீர்த்துள்ளார்.

Latest Videos

click me!