Tamannaah: நான் ரொம்ப பிசி! தோழா படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்த பிரபல நடிகை!

First Published Jun 14, 2024, 9:19 PM IST

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்ற தோழா' படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை யார்? என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

thozha

தளபதி விஜயை வைத்து 'வாரிசு' படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடபள்ளி இயக்கிய 'தோழா' படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்த நிலையில், அவருக்கு முன்பு ஹீரோயினாக நடிக்க இருந்த பிரபல நடிகை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

thozha

தெலுங்கு திரை உலகில், முன்னணி இயக்குனராக இருக்கும் 'வம்சி' கடந்த 2016 ஆம் ஆண்டு, தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கிய திரைப்படம் தோழா. இப்படம் தெலுங்கில் 'ஓப்பிரி' என்கிற பெயரில் வெளியானது. 

ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி! சந்தோஷத்தில் மனோகரி... சுடர் மீது கோபத்தில் இந்து! நினைத்தேன் வந்தாய் அப்டேட் !
 

thozha

பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்ட காமெடி மற்றும் எமோஷனல் ட்ராமாவான 'தி இன்டச்புல்ஸ்' என்கிற படத்தின் ரீமைக்காக எடுக்கப்பட்டது தான் இந்த படம். இந்த படத்தை Éric Toledano and Olivier Nakache ஆகிய இருவர் இயக்கி இருந்தனர்.

Karthi

பல விருதுகளை வாங்கி குவித்த இந்த படத்தை, இயக்கி தமிழ் மற்றும் தெலுங்கிலும் வெற்றி பெற்றார் வம்சி. 50 முதல் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 85 கோடி வரை வசூலை அள்ளியது. இந்த படத்தில் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நடிகை அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்க... ஹீரோ கார்த்திக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார்.

Mic Mohan: ரசிகையின் தாலியை பார்த்து மெய் சிலிர்த்து போன மோகன்! எந்த கணவர் இப்படி சொல்லுவார்?
 

உடல்நிலை சரியில்லாத ஒரு பணக்கார தொழிலதிபரை கவனித்துக் கொள்ள வரும் கார்த்தி, அந்த மனிதர் உடல்நிலை சரியில்லாதவர் என்பதை மறந்து, அவரிடம் சகஜமாக பேசுவதும்.. பழகுவதும்.. அறிந்த சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றுவதும் தான் இப்படத்தின் கதைக்களம்.
 

இந்த படத்தில் தமன்னா நடித்த கீர்த்தி கதாபாத்திரத்தில், முதலில் நடிக்க இருந்தது பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தானாம். அப்போது அவர் பல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருந்ததால்... இப்படத்தில் நடிக்க முடியாது என கூறியதைத் தொடர்ந்து, தமன்னா இப்படத்தில் கமிட் ஆனார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எளிமையாக நடந்த ஸ்ரித்திகா - ஆரியன் இரண்டாவது திருமணம்! பிரமாண்டமாக நடந்த வெட்டிங் ரிசப்ஷன்! போட்டோஸ்

Latest Videos

click me!