benefits of wash feet
பகல் முழுவதும் வெளியில் வேலை செய்பவர்கள், இரவில் வீட்டிற்கு வந்ததும் தூங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் நீங்கள் கால்களை கழுவாமல் தூங்க செல்கிறீர்களா..? ஆம், என்றால் உடனே இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
benefits of wash feet
உங்களுக்கு தெரியுமா..? இரவு தூங்கும் முன் கால்களை கழுவும் பழக்கம் இருந்தால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குமாம். அது என்னென்ன நன்மைகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
benefits of wash feet
சிலருக்கு கால்களில் அதிகமாக வியர்க்கும். இந்த பிரச்சினை உள்ளவர்கள் இரவில் கால்களை கழுவி தூங்கினால் உங்கள் பாதங்களில் பாக்டீரியாக்கள் வளராமல் தடுக்கப்படும் மற்றும் தடகள கால் பிரச்சனையில் இருந்து உங்களை காப்பாற்றும்.
benefits of wash feet
உங்கள் பாதங்களில் தோல் வறட்சி, விரிசல் ஏற்பட்டால் நாள் முழுவதும் வியர்வை தூசி மற்றும் அழுக்குகள் அதில் ஒட்டிக்கொள்ளும். எனவே, தூங்கும் முன் உங்கள் கால்களை சோப்பு போட்டு, ஸ்க்ரப் வைத்து சுத்தம் செய்யுங்கள். இதனால் இறந்த சரும செல்கள் அனைத்தும் நீங்கி, சருமத்தை மென்மையாக்கும்.
benefits of wash feet
சிலருக்கு அவர்களது உடல் பிறரை காட்டிலும் அதிகமாகவே உஷ்ணமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக கால்களை கழுவி விட்டு தூங்குவது நல்லது. இதனால் அவர்களது உடல் வெப்பநிலை சீராக இருக்கும்.
benefits of wash feet
இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாதங்களை சுத்தம் செய்து, துர்நாற்றம் அடிக்காது மற்றும் பாதங்களை சுத்தம் செய்த பிறகு மாய்ஸ்ரைசரை பயன்படுத்த மறுக்காதீர்கள்.
benefits of wash feet
நாள் முழுவதும் உங்கள் கால்களுக்கு வேலை இருப்பதால் தசைகள் மற்றும் எலும்புகளில் வலி ஏற்படும். இதனால் பதற்றமும் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இரவு தூங்கும் முன் கால்களை சுத்தம் செய்துவிட்டு தூங்கினால் வலி நீங்கி, நிதானமாக உணருவீர்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D