Mic Mohan: ரசிகையின் தாலியை பார்த்து மெய் சிலிர்த்து போன மோகன்! எந்த கணவர் இப்படி சொல்லுவார்?

Published : Jun 14, 2024, 05:10 PM IST

சமீபத்தில் நடிகர் மைக் மோகன் கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ரசிகை ஒருவரை பற்றி கூறி பலரையும் வியக்க வைத்துள்ளார்.  

PREV
110
Mic Mohan: ரசிகையின் தாலியை பார்த்து மெய் சிலிர்த்து போன மோகன்! எந்த கணவர் இப்படி சொல்லுவார்?
Mic Mohan

நடிகர் மோகன் மைசூர் மாவட்டம் உடுப்பியில் பிறந்து வளர்ந்தவர் . இவரின் உண்மையான பெயர் மோகன் ராவ். சினிமாவுக்கு வந்த பின்னர் மோகன் என மாற்றிக்கொண்டார். இவர் பல படங்களில் மைக்கை வைத்துக்கொண்டு பாடும் பாடல்கள் இடம் பெற்றதால், இவரை ரசிகர்கள் மைக் மோகன் என அழைக்க துவங்கினர்.
 

210
Haraa

1980 ஆம் ஆண்டு வெளியான 'மூடுபனி' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து.. நெஞ்சத்தைக் கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, தாம்பத்தியம் ஒரு சங்கீதம், காற்றுக்கென்ன வேலி, அர்ச்சனை பூக்கள், கோபுரங்கள் சாய்வதில்லை, உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

எளிமையாக நடந்த ஸ்ரித்திகா - ஆரியன் இரண்டாவது திருமணம்! பிரமாண்டமாக நடந்த வெட்டிங் ரிசப்ஷன்! போட்டோஸ்
 

310

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்த இவர், நடிப்பில் 80 கால கட்டத்தில், ஒரு வருடத்தில் மட்டும் 10 படங்கள் வரை வெளியாகும். ரஜினி - கமல்ஹாசனை விட அதிக சம்பளம் இவர் வாங்கியதாகவும் கூறப்பட்டது. அந்த அளவுக்கு படு பிஸியான ஹீரோவாக வலம் வந்தார் மோகன். சூப்பர் ஸ்டார் என்கிற இடத்தை இவர் பிடிப்பார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான், இவருக்கு வரக்கூடாத வியாதி ஒன்று வந்ததாக நடிகை ஒருவர் கொளுத்தி போட்ட வதந்தி , கோலிவுட் திரையுலகத்தில் பற்றி எரிந்து இவரின் திரையுலக வாழ்கையாயே கேள்விக்குறியாக மாற்றி விட்டது.

410
Haraa

பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக ஒதுங்கிய இவர், அப்படி எந்த வியாதியும் தனக்கு இல்லை என நிரூபித்து தற்போது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் மோகன்.

45 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசை பட்ட பிரேம்ஜி! கங்கை அமரன் ஓகே சொன்ன பிறகு... கலைத்து விட்ட பிரபலம்!
 

510
Haraa

2008 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'சுட்ட பழம்' என்கிற திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில்,  நீண்ட இடைவெளிக்கு பின்னர் 'ஹாரா' படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தார். இந்த படம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பட குழுவினர் அண்மையில் இப்படத்தின் வெற்றி விழாவையும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
 

610

இதைத்தொடர்ந்து 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் 'என்கிற தளபதி விஜய் நடிக்கும் படத்திலும் தளபதிக்கு வில்லனாக நடித்து வருகிறார். விரைவில் இப்படம் துடித்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Raveena Daha: சூப்பர் ஹிட் சீரீஸின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக கமிட் ஆன ரவீனா தாஹா! வைரலாகும் போட்டோஸ்!
 

710

இந்நிலையில் நடிகர் மோகன் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், ரசிகை ஒருவருடன் நடந்த சந்திப்பு குறித்து பகிர்ந்துள்ளார். ஒருமுறை இவர் மலேசியாவில் இருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மோகனிடம் வந்து அவரின் ரசிகை என தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு பேசியுள்ளார்.
 

810

இவருடன் இவரின் மகனும் இருந்தாராம். பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த பெண்ணின் மகன்... அம்மா அதைக் காட்டுங்கள் என கூறியுள்ளார். உடனே அந்தப் பெண் தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அதில் இருந்த லாக்கெட் ஒன்றை திறந்து மோகனிடம் காட்டியுள்ளார். அதை பார்த்ததுமே மோகனுக்கு ரொம்ப ஷாக் ஆகிவிட்டதாம். காரணம் தாலியில் தொங்கும் லாக்கெட்டில் இவருடைய புகைப்படம் இருந்துள்ளது.

'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

910

பின்னர் இது குறித்து பேசிய அந்த ரசிகை, எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். அதனால் உங்களுடைய லாக்கெட் ஒன்றை வைத்திருந்தேன். திருமணமான புதிதில் உங்களை எனக்கு பிடிக்கும் என கூறி என் கணவரிடம் இந்த லாக்கெட்டை காட்டினேன். அவர் சரி இதை நீ உன் கழுத்திலேயே போட்டுக் கொள் என கூறினார்.

1010

அதனால் என் தாலியிலேயே நான் கோர்த்து கொண்டேன். நான் சாகும் வரை உங்களை என் தாலியிலேயே வைத்திருப்பேன் என கூறினாராம். மேலும் இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பது தான் இன்னமும் சினிமாவில் என்னை நிலைத்து நிற்க செய்துள்ளது என நெகிழ்ச்சியுடன் மோகன் தெரிவித்துள்ளார். அதே நேரம் இப்படி எந்த ஒரு கணவர் சொல்லுவார் என ஆச்சர்யப்பட்டேன் என கூறியுள்ளார்.
Ponni : பொன்னி சீரியலில் இருந்து திடீர் என விலகிய பிரபல நடிகை! அதிரடியாக உள்ளே வந்த சன் டிவி சீரியல் நடிகை!

click me!

Recommended Stories