ஆனி மாத ராசி பலன் 2024 : 12 ராசியில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போவது யார்..?

Published : Jun 14, 2024, 02:21 PM ISTUpdated : Jun 14, 2024, 02:34 PM IST

ஆனி மாதத்தில் 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.  

PREV
113
ஆனி மாத ராசி பலன் 2024 : 12 ராசியில் அதிர்ஷ்டத்தை அள்ளப்போவது யார்..?

ஆனி மாதத்தில் மிதுன ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கவுள்ளார். சூரியனுடன் சுக்கிரன், புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் சஞ்சரிக்கும். எனவே ஆனி மாதத்தில் 12 ராசிகளுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.

213

மேஷம்: ஆனி மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் அதிக வளர்ச்சி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

313

ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த ஆனி மாதத்தில் செலவு விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை தொழில் விஷயத்தில் புதிய வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

413

மிதுனம்: மிதுனம் ராசிக்காரர்கள் ஆனி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டும் செய்யும் தொழில் அதிர்ஷ்டமும், வளர்ச்சியும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பயணங்கள் மூலம் நல்ல வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சில கடினமான சூழல் இருக்கும். எனவே, கவனமாக இருங்கள்.

513

கடகம்: ஆனி மாதத்தில் கடகம் ராசிகாரர்களுக்கு மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். செய்யும் தொழில் அல்லது வேலையில் தோல்விகளை சந்திக்க நேரிடும். உங்கள் வருமானம் நன்றாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்ப உறவில் சில மனஸ்தாபங்களை சந்திக்க நேரிடும். 

613

சிம்மம்: ஆனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்கள் பலவிதமான நற்பலன்களை பெறுவார்கள். தொழில், வியாபாரம், வேலை தொடர்பான விஷயத்தில் கடின உழைப்பிற்கான நல்ல பலனை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும்.

713

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு ஆனி மாதத்தில் எதிர்பார்த்த விதத்தில் பல ஆதாயமான விஷயங்கள் நடக்கும். வேலை தொடர்பான விஷயத்தில் வெளியூர் செல்வீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். ஆனால், பண விஷயத்தில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கவனமாக இருங்கள்.

இதையும் படிங்க:  Rasi Palan : இந்த 4 ராசிக்காரங்கள காதலிப்பது ரொம்பவே ஈஸி.. உடனே காதலில் விழுந்துவிடுவார்கள்!

813

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு ஆனி மாதத்தில் வெளிநாடு அல்லது வெளியூர் மூலம் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் அடைவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

இதையும் படிங்க:  Rasi Palan : நீங்கள் கல்யாணம் பண்ணா இந்த 3 ராசிக்காரங்கள மட்டும் பண்ணாதீங்க.. விவாகரத்து கன்பார்ம்..!

913

விருச்சிகம்: ஆனி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் சிலருக்கு வேலை இழப்பு, வேலையில் திருப்தியின்னை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் விஷயத்தில் கூடுதல் முயற்சி கடின உழைப்பும் அவசியம். பண விஷயத்தில் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, கவனமாக இருங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

1013

தனுசு: ஆனி மாதத்தில் தனுசு ராசிக்காரர்கள் நண்பர்கள் மூலம் நல்ல ஆதரவை பெறுவீர்கள். வேலை தொடர்பாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வணிகத்தில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். பணம் தொடர்பான விஷயத்தில் அதிர்ஷ்டசாலி.

1113

மகரம்: மகர ராசிக்காரர்கள் ஆனி மாதத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. தொழில் சம்பந்தமான விஷயத்தில் உங்களுக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் போட்டியை எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். கடன் வாங்குவது தவிர்ப்பது நல்லது.

1213

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ஆனி மாதத்தில் நண்பர்கள் மூலம் சாதகமான பலனும், வெற்றியும் கிடைக்கும். வேலை சம்பந்தமாக பயணம் செல்வீர்கள். அது உங்களுக்கு அனுகூலமான பலன்களை தரும். குடும்ப உறவில் ஈகோவை கட்டுப்படுத்துங்கள்.

 

1313

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஆனி மாதத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் கடனாளி ஆகலாம். வணிகஸ்தர்கள் கடுமையான போட்டியை சந்திக்க நேரிடும். வேலையில் அதிக அழுத்தம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை.

Read more Photos on
click me!

Recommended Stories