ஒவ்வொரு ஆண்டும் ஈத்-உல்-அதா (அ) பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் சிறப்பாக இஸ்லாமிய மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சுவையான உணவுகளை தயாரித்து புதிய ஆடைகளை அணிந்து பிறருக்கு தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள்.
அதுமட்டுமின்றி, இந்த பண்டிகைக்கு முந்தைய நாட்களில் கைகளில் மெஹந்தி பூசுவதும் ஈத்-உல்-அதாவின் மற்றொரு முக்கிய ஈர்ப்பாகும். எனவே இவர்களுக்காகவே சில மெஹந்தி டிசைன்கள் இங்கே உள்ளன. அவை.
உள்ளங்கையில் மட்டும்: பக்ரீத் அன்று உங்கள் உள்ளங்கையின் தோற்றத்தை அலங்கரிப்பதற்காக இந்த மாதிரி மெஹந்தி போடுங்கள்.
மேல் கை: உங்கள் கையின் மேல் பக்கத்தில் மெஹந்தியால் அலங்கரியுங்கள். இது உங்கள் கைகளுக்கு கூடுதல் அழகை கொடுக்கும்.
பாதி கையளவு: இந்த பக்ரீத் நாளில் உங்கள் கையை மெஹந்தியால் முழுவதுமாக அலங்கரிக்க விரும்பவில்லை என்றால், பாதி அளவு வரை மெஹந்தி போடுங்கள். இது பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
கை முழுவதும்: இந்த ஆண்டின் இஸ்லாமியர்களுக்கு சிறந்த பண்டிகை பக்ரீத் என்பதால், இந்நாளில் முழு கை வரை மெஹந்தி வரைந்து அதை உங்கள் நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு காட்டலாம்.