'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா?

First Published | Jun 13, 2024, 11:06 PM IST

இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, 'பருத்திவீரன்' படத்தில் சித்தப்பு சரவணன் நடித்த செவ்வாழை கேரக்டரில் முதலில் நடிக்க இருந்த நடிகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
 

paruthiveeran

தமிழில் ஒரு வருடத்திற்கு 500-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானாலும் , அதில் ஒரு சில படங்கள் மட்டுமே ரசிகர்கள் மனதை கவர்கிறது. அப்படி கவரும் படங்கள் ரசிகர்களால் பல வருடங்கள் கழித்தும் பேசப்படுமா? என்பது சந்தேகமே. ஒரு வேலை அப்படி பேசப்படும் படமாக இருக்கும் என்றால் அது தான் அந்த படத்தின் உண்மையான வெற்றி எனலாம்.

அந்த வகையில் வெளியாகி 17-ஆண்டுகளுக்கு பின்னரும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் படமாக உள்ளது 'பருத்திவீரன்'. இந்த படம் தான்... துணை இயக்குனராக இருந்து, கதாநாயகனாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தியின் முதல் படமாகும். இவருக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி இப்படத்தில் நடித்திருந்தார். முத்தழகு கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்த பலனே இவருக்கு இப்படம் தேசிய விருதை பெற்று தந்தது.

Ponni : பொன்னி சீரியலில் இருந்து திடீர் என விலகிய பிரபல நடிகை! அதிரடியாக உள்ளே வந்த சன் டிவி சீரியல் நடிகை!
 

Tap to resize

paruthiveeran

அதே போல்  இப்படத்திற்காக யுவன் இசையமைத்த பாடல்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இப்படம் பற்றி ரசிகர்கள் அடிக்கடி பேசி கொண்டிருக்க இன்னொரு காரணம் இப்படத்தை விடாமல் துரத்தும் தயாரிப்பு தரப்பின் பிரச்சனை. இரு தரப்பும் மாறிமாறி அறிக்கை விட்டு, ஒருவரை ஒருவர் குற்றம் கூறி வந்தாலும், இதில் சம்மந்தப்பட்ட நடிகர் கார்த்தியும், சூர்யாவும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது தான் ஹை லைட்.
 

paruthiveeran

குறிப்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீரை திருடன் என விமர்சித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து கொந்தளித்த அமீரின் சகோதரர்களான சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் ஞானவேல் ராஜாவை லெஃப்ட் ரைட் வாங்கினர். பின்னர் அமீரும் தன் பங்கிற்கு அறிக்கை வெளியிட... ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க பிரச்சனை ஓய்ந்தது.

Vijay TV Serial Climax: ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் விஜய் டிவி சூப்பர் ஹிட் தொடர்! எந்த சீரியல் தெரியுமா?
 

Pasupathy

இந்நிலையில் இப்படம் குறித்து பலரும் அறிந்திடாத ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பருத்தி வீரன் படத்தில், செவ்வாழை கதாபாத்திரத்தில் முதல் நடிக்க இருந்தது நடிகர் சரவணன் இல்லையாம். இயக்குனர் அமீர் இந்த கதாபாத்திரத்தை நடிகர் பசுபதியை மனதில் வைத்து தான் எழுதினாராம். அவரிடம் கதையை கூறி விட்டு அவரின் கால்ஷீட் கேட்டு வெயிட் பண்ணியபோதும் அவர் படத்தில் நடிப்பதாக கூறவில்லையாம்.
 

Saravanan

அதன் பின்னர் நடிகர் சரவணன், அமீரிடம் பட வாய்ப்பு கேட்க... செவ்வாழை கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைத்தாராம். சரவணன் இந்த கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான் என்றாலும், ஒருவேளை பசுபதி நடித்திருந்தாலும்... செவ்வாழை கதாபாத்திரத்திற்கு நிச்சயம் பொருந்தி நடித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

தமிழ் பிரபலங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வரலட்சுமி!

Latest Videos

click me!