அதிக நட்சத்திரங்களை வைத்து அதிவேகமாக எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது சுயம்வரம் திரைப்படம். 14 இயக்குனர்கள், 45 உதவி இயக்குனர்கள், 19 ஒளிப்பதிவாளர்கள், 4 படத்தொகுப்பாளர்கள், 4 இசையமைப்பாளர்கள், 25 அனுபவம் வாய்ந்த நடிகர்கள் என இத்தனை பேரின் கூட்டு முயற்சியால் தான் தமிழ் சினிமா இத்தகைய மகத்தான சாதனையை படைத்திருக்கிறது.
சுயம்வரம் படத்தை சுந்தர் சி, கே.எஸ்.ரவிக்குமார், பி வாசு, செல்வா, சுந்தர்ராஜன் உள்பட 14 இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். மேலும் இதில் அப்பாஸ், அர்ஜுன், பிரபுதேவா, பிரபு, கார்த்திக், சத்யராஜ், பாக்கியராஜ், ஊர்வசி, ரம்பா, விஜயகுமார், நெப்போலியன், பார்த்திபன், பாண்டியராஜன், சுவலட்சுமி உள்பட 25க்கும் மேற்பட்ட பிரபலங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.