ஏதாவது ஒரு ஜோடியை பார்க்கும்போது நானும் காதலிக்க வேண்டும், டேட்டிங் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்த குணமுடைய ஆண் (அ) பெண்ணை காதலிக்கவோ (அ) டேட்டிங் செய்வதற்கு பதிலாக நீங்கள் தனியாகவே இருந்துவிடலாம். அந்த குணங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
வார்த்தைகளை மட்டும் சொல்லுபவர்கள்: சிலர் தங்களது வார்த்தைகளால் மட்டுமே, 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்று தங்கள் அன்புகளை வெளிப்படுத்துவார்கள். ஆனால், உண்மையில் அப்படி செய்வதில்லை. அது வெறும் வார்த்தைகளால் மட்டுமே இருக்கும்போது தவிர, செயலில் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். எனவே, இப்படிப்பட்டவர்களுடன் பழகுவதை உடனே நிறுத்துங்கள்.
EX உடன் தொடர்பு வைத்திருப்பவர்: பொதுவாகவே இந்த குணம் ஆண்களுக்கு தான் அதிகமாகவே இருக்கும். ஒரு புதிய உறவில் இருக்கும்போது கூட, ஏதாவதொறு சந்தர்ப்ப சூழ்நிலையில் தங்களது முன்னாள் காதலியை சந்திப்புக்கு பிறகு அவர்களுடன் மீண்டும் பலக ஆரம்பித்து விடுவார்கள். எனவே, இது போன்ற நபர்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருங்கள்.
பிறர் முன்னிலையில் அவமதிப்பது: பொதுவாகவே ஆண்கள் தான் இந்த தவறை அதிகமாகவே செய்வார்கள். எனவே, நீங்கள் ஒரு ஆணை காதலிக்கும் முன் (அ) டேட்டிங் செய்வதற்கு முன் அவர் உங்களை எப்படி பலருக்கு முன்பாக நடத்துகிறார் என்பதை முதலில் கவனியுங்கள். உங்கள் துணை உங்களை ஆதரிப்பதற்கு பதிலாக, அவமதித்தால் அத்தகைய நபருடன் உடனே விலகி இருங்கள். அப்படிப்பட்ட நபர் உங்களுக்கு சரியான துணை அல்ல. மேலும், இப்படிப்பட்டவர்களுடன் இருப்பது பதிலாக தனிமையில் இருப்பது நல்லது.
இதையும் படிங்க: ஆண்களை விட பெண்களுக்கு தான் செக்ஸ் ஆசை அதிகம் வருமாம்.. அது ஏன் தெரியுமா..?
என்ன நடக்கிறது?: இருப்பதெல்லாம் ஆண்களும் பெண்களும் என்ன அடுத்து நடந்தாலும் நடக்கட்டும் என்று அசாலாக உறவில் இருப்பார்கள். உறவில் ஒருவர் சீரியஸாக இருந்தாலும், இன்னொருவர் ஏனோதானோ என்று உறவை கொண்டு செல்வார்கள். இந்த மாதிரியான நபரை டேட்டிங் செய்வதற்கு பதிலாக, நீங்கள் தனியாகவே இருப்பது நல்லது.
இதையும் படிங்க: கணவன்-மனைவிக்குள் எவ்வளவு சண்டை வந்தாலும் உறவு வலுவாக வைக்க சில டிப்ஸ்!
தகுதியை புரிந்து கொள்ளாதவர்: நீங்கள் எவ்வளவுதான் செய்தாலும், நீங்கள் விரும்பும் நபர் அதை எதையும் பார்க்காமல் உங்களை குறை சொல்லிக் கொண்டே இருந்தால், அவர்களிடமிருந்து உடனே விலகி இருங்கள். உங்கள் தகுதியை புரிந்து கொள்ளாத ஒருவருடன் உறவில் இருப்பதை விட, தனிமையில் இருப்பது நல்லது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D