
திரையுலகில் அறிமுகமான போது, சத்தமில்லாமல் சைலண்டாக நான்கே படத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர் தான் வனிதா விஜயகுமார். இவரின் திருமண விவாகரத்து மீண்டும் இவரை பற்றி மீடியாக்களில் பேச வைத்த நிலையில், விவாகரத்து பெற்ற சில மாதங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்
இவரை சர்ச்சை நடிகை என சித்தரிக்க வைத்தது, அப்பா - மகள் இடையே நடந்த பிரச்சனை தான். வனிதா தன்னுடைய மகன் ஸ்ரீஹரிக்காக நடத்திய பாச போராட்டம் பலரும் அறிந்ததே. நீதி மன்றம் குழந்தையின் விருப்பப்படி தந்தையிடம் இருக்க அனுமதி கொடுக்க, அதனை ஏற்று கொள்ள முடியாமல் வனிதா துடிக்க, வனிதாவிடம் இருந்து ஸ்ரீஹரியை விஜயகுமார், விமான நிலையத்திற்கு வந்து அவருடன் சண்டையிட்டு அழைத்து சென்றார்.
வனிதா கத்தி... கதறி பார்த்தும் எந்த பலனும் இல்லாததால், தன் தந்தையை பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுவே வனிதா மீது மஞ்சுளாவுக்கு வெறுப்பு வர காரணமாக அமைந்தது.
வனிதா தனது மகளே கிடையாது, அவள் ஒரு ராட்சசி. அவள் என் வயிற்றில் பிறந்ததை நினைக்கும்போதே கேவலமாக உள்ளது என்றெல்லாம் திட்டித்தீர்த்தார் மஞ்சுளா. இந்த சம்பவங்கள் எல்லாம் மீடியா முன்பு ஊரறிய நடந்திருந்தாலும், அவர்கள் குடும்பத்திற்குள் நடந்த சில விஷயங்களை பற்றியும், தன்னுடைய தாய் மஞ்சுளாவின் கடைசி நிமிடத்தில் நடந்த விஷயங்களையும் தான்... ஷகிலா எடுத்த பேட்டியில் கலந்து கொண்டபோது தான் வனிதா தெரிவித்தார்.
ஏர்போர்டில் விஜயகுமாருடன் நடந்த பிரச்சனைக்கு பின்னர், ஒருநாள் மஞ்சுளா தனக்கு போன் செய்து வீட்டு அழைத்ததாகவும், அப்போது வீட்டுக்கு வந்து தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுததாகவும் வனிதா தெரிவித்துள்ளார்.
தனது தாயின் குடிப்பழக்கம் பற்றி பேசிய வனிதா, "இந்த குடியால் அம்மாவுக்கு மூன்று முறை மஞ்சள் காமாலை வந்தது. ஆனாலும் குடிப்பழக்கத்தை அவங்க நிறுத்தவில்லை. ஒருமுறை பேட்டி கொடுக்கும் போதே, செம்ம போதையில் இருந்ததை அனைவருமே பார்த்தனர். அம்மா மிகவும் கிரிட்டிக்கல் நிலையில் ICU-வில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவர்கள் இன்னும் 72 மணிநேரத்தில் இறந்துவிடுவார் என கூறி விட்டனர்.
அந்த சமயத்தில் என் அம்மாவின் பாசம் வெளிப்பட்டது. தன்னிடம் சில ரகசியங்களை கூறினார். உன்னை அப்படியே விட்டுடுங்க இந்த குடும்பம் என பயந்தார். எனவே இந்தியாவின் தலைசிறந்த வக்கீலான ராம்ஜெத்மலானியை அழைத்து அனைத்து சொத்து பத்திரங்களிலும் என்னுடைய பெயரை சேர்க்க வேண்டும் என கூறினார். அதோடு தான் பல உண்மைகளை சொல்ல வேண்டும் அதனை வீடியோவாக எடு எனவும் கூறினார். ஆனால் நான் அதை செய்யவில்லை. அதேபோல் என்னுடையை தந்தையின் கையை பிடித்து வனிதாவை விட்றாதீங்க என சொன்னார்.
ஆனால் என் அம்மா இறந்ததும் எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது. என் அம்மாவுக்கு இறுதிச்சடங்கை செய்ய விடாமல் என் குடும்பத்தினரே தடுத்தனர். பின்னர் சரத்குமாரும், ராதாரவியும் தான் என்னை அழைத்து இறுதிச்சடங்கை செய்ய வைத்தனர். அன்னைக்கு அவங்க மட்டும் இல்லேனா என் தாய்க்கு என்னால் இறுதிச்சடங்கு கூட செய்ய முடியாம போயிருக்கும். இப்போ வரைக்கும் எனக்கு சொத்தில் உரிமையில்லைனு சொல்றாங்க. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. சொத்து ஒருவேளை பிரிக்கப்பட்டால் என்னுடைய மகள்களுக்கும் ஒரு பங்கு கிடைக்க வேண்டும் அதுவே எனது விருப்பம் என வனிதா கூறி கூறியுள்ளார்.