Bakrid 2024 : இஸ்லாமியர்கள் பக்ரீத் கொண்டாடுவதற்கான காரணம் என்ன தெரியுமா..?

First Published Jun 14, 2024, 10:27 AM IST

இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 17ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வருகிறது. எனவே, இந்த பண்டிகையின் முக்கியத்துவம் மற்றும் வரலாறு பற்றி தெரிந்து கொள்வோம்.

பக்ரீத் பண்டிகையை உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வார்கள். இந்த பண்டிகை தியாகத்தின் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் 10ம் நாள் அன்று ஹஜ் பெருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்.

2024 பக்ரீத் பண்டிகை எப்போது?: பொதுவாகவே,ரம்ஜான் பண்டிகை முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து பக்தி பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை நாளில் ஒவ்வொரு இஸ்லாமியர்களும் பள்ளிவாசலில் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபடுவார்கள். அதுவும் இந்த தொழுகையானது சூரிய உதய முழுமையாக வந்த பிறகு தான் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையானது, இந்நியாவில் ஜூன் 17ஆம் தேதி திங்கள் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

மேலும், இந்த புனித நாளில் தொழுகைகள் முடித்த பிறகு, ஒருவருக்கொருவர் 'ஈத் முபாரக்' என்று வாழ்த்துக்களை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொள்வார்கள். அதுமட்டுமின்றி, இறந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று அவர்களுக்கு பிடித்தமான உணவு மற்றும் ஆடைகளை வழங்குவார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை ஆசீர்வதிப்பதாக நம்புகிறார்கள். 

பக்ரீத் ஏன் கொண்டாடப்படுகிறது?: நபி ஹஸ்ரத் இப்ராஹிம் முஹம்மது தனது வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்தார் தினமும் கடவுளே வணங்கி வந்தார். அவருடைய வழிபாட்டில் கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எனவே, இப்ராஹிமை சோதிக்க நினைத்த கடவுள், ஒரு நாள் உனது மகனை எனக்கு பலி கொடுக்குமாறு இப்ராஹிமிடம்  கடவுள் கேட்டுக்கொண்டார்.

கடவுள் ஏன் இப்படி கேட்டார் என்றால், இப்ராஹிமுக்கு அவருடைய மகன் பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்ததால். இப்ராஹிமும் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தனது மகனை பலி கொடுக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். இப்ராஹிம் கண்ணை மூடிக் கொண்டு தனது மகனை பலி கொடுக்கும் போது, கடவுள் அவனுக்காக ஒரு ஆட்டுக்குட்டியை பலியிடும் இடத்தில் வைத்தார். அன்று முதல் இந்நாள் வரை ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்ராஹிம் அவர்கள் ஆட்டுக்குட்டியை மகிழ்ச்சியுடன் பலியிட்டதால் ஒவ்வொரு பக்ரீத் தினத்தன்று இஸ்லாமியர்கள், ஆட்டை பலி கொடுக்கும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றன.

Latest Videos

click me!