இந்த கூட்டத்தில் பேசிய விஜய், ''அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு எப்படி பாதுகாப்பு கொடுக்க வேண்டும்? என்பதை புதுவை அரசிடம் இருந்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய விஜய், ''நான் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை; புதுச்சேரிக்கும் சேர்த்து தான் குரல் கொடுப்பேன்'' என்றார்.
ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம்
மேலும் பேசிய விஜய், ''புதுவை அரசுடன் கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியை கண்டுகொள்ளவில்லை. மாநில அந்தஸ்து கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை. இங்கு வளர்ச்சி ஏற்படவும் துணை நிற்கவில்லை. இந்திய அளவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரி தான். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமே ரேஷன் கடைகள் தான். மற்ற மாநிலங்களை போல் இங்கும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட வழங்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார்.