புதுச்சேரியை பார்த்து கத்துக்கோங்க.. முதல்வர் ஸ்டாலினை சீண்டிப்பார்த்த விஜய்

Published : Dec 09, 2025, 12:02 PM IST

புதுச்சேரி உப்பளம் துறைமுகத்தில் நடந்த தவெக கூட்டத்தில் நடிகர் விஜய், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் உரையாற்றினார். புதுவை மக்களின் உரிமைக்காகவும் சமமாக குரல் கொடுப்பேன் என அவர் உறுதியளித்தார்.

PREV
12
ஸ்டாலினை விமர்சித்த விஜய்

புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில் நடிகர் விஜய் இன்று கலந்து கொண்ட பொதுக்கூட்டம், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின் பின்னணியில் கடும் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. தவெக சார்பில் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 5,000 பேருக்கு QR கோட் பாஸ் இல்லாதவர்கள் உள்ளே செல்லலாம் அனுமதிக்கப்படவில்லை. சிறுவர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் கூட வேண்டாம் என காவல்துறை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தியது. 

புதுச்சேரியில் வசிப்பவர்களுக்காக மட்டும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதால், தமிழ்நாட்டின் அண்டை மாவட்டங்களில் இருந்து வரும் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தினர். அரங்கு நிகழ்வில் பேசிய விஜய், புதுச்சேரி அரசு வழங்கிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டி தமிழக அரசை நேரடியாக விமர்சித்தார். “மற்ற அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்வுகளுக்கும் எப்படி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு, புதுச்சேரி அரசாங்கத்திடம் இருந்து கற்றுக் கொள்கிறது கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.

22
புதுச்சேரியில் விஜய் பேச்சு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிர்வாக ரீதியாக தனித்தனியாக இருந்தாலும், மக்கள் மனதில் ஒன்று என்று அவர் வலியுறுத்தினார். “நாம் எல்லோரும் ஒரே சொந்தம். ஒன்றிய அரசு நம்மை வேறு வேறாகப் பார்க்கலாம். ஆனால் நாம் வேறுபட்டவர்கள் அல்ல” என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு மக்களைப் போல புதுச்சேரி மக்களும் பல ஆண்டுகளாக பொறுமையுடன் தாங்கி வருகின்றனர். 

புதுவைக்கும் சமமாக குரல் கொடுப்பேன். இது என் கடமையும் உறுதியும்” என்றார். புதுவை அரசு, வேறு கட்சி நடத்தும் நிகழ்வாக இருந்தாலும் தேவையான பாதுகாப்பை அளித்ததாகவும், இதைப் பார்த்து தமிழக அரசு பாடம் கற்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். “ஆனால் அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள்” என கடும் விமர்சனத்துடன் சிறிது நேரத்தில் பேச்சை முடித்துக்கொண்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories