கரூர் சம்பவம் நடந்து 72 நாட்களுக்கு பின்னர் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசி உள்ளார். புதுச்சேரியில் உள்ள உப்பளம் பகுதியில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஸ் உள்ள 5000 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் முதலில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அதன்பின்னர் தவெகவின் முக்கிய புள்ளியான ஆதவ் அர்ஜுனா பேசினார். அதற்கு அடுத்தபடியாக தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். என் நெஞ்சில் குடியிருக்கும் என சொல்லி தன்னுடைய உரையை தொடங்கினார் விஜய். அப்போது அரங்கம் அதிர விசில் சக்கம் பறந்தது.
விஜய் என்ன பேசினார்?
விஜய் பேசியதாவது : “தமிழ்நாடும் புதுச்சேரியும் வேற வேற இல்லை, ஒன்னுதான். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா மட்டுமல்ல உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்கள் எல்லாருமே நம்மோட உயிர் தான், நம்முடைய வகையறா தான். இந்த புதுச்சேரிக்கு நிறைய சிறப்புகள் உண்டு. 1977ல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார், ஆனால் அதற்கு முன்பே 1974-லேயே அவருடைய ஆட்சி புதுவையில் அமைந்தது. நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரை மிஸ் பண்ணிடாதீங்க என அலர்ட் பண்ணியதே புதுச்சேரி தான்.
என்னை 30 வருஷமா புதுச்சேரி மக்கள் தாங்கி புடிச்சிகிட்டு இருக்கீங்க. இந்த விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல, புதுச்சேரி மக்களுக்கும் குரல் கொடுப்பான். இந்த புதுச்சேரி அரசு தமிழ்நாட்டில் உள்ள திமுக மாதிரி கிடையாது. வேறு ஒரு கட்சியாக இருந்தாலும் பாதுகாப்பு கொடுத்துள்ள புதுச்சேரி சிஎம் சாருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்பார்த்தாவது திமுக கத்துகிட்டா நல்லா இருக்கும்.