ரூ.597 கோடி சொத்து.. 26 கோடி தங்கம்.. 38 கோடிக்கு வாட்ச்.. பிரமிக்க வைக்கும் சொத்து.. யார் இந்த ஜோஸ் சார்லஸ் மார்டின்?

Published : Mar 24, 2026, 02:40 PM IST

Jose Charles Martin: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் 597 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். அவருக்கு 210 கோடி ரூபாய் கடன் மற்றும் அவர் மீது 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.

PREV
15

புதுச்சேரியில் 30 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி வியாழக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ்- பாஜக- அதிமுக- லஜக இடம் பெற்றுள்ளன. இதில், என்.ஆர். காங்கிரஸ் 16, பாஜக 10, அதிமுக 2, லஜக 2 இடங்களில் போட்டியிடுகின்றன. கடந்த 16-ம் தேதி தொடங்கிய வேட்பு மனுத் தாக்கல் நேற்று முடிவடைந்தது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

25

இந்நிலையில் புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவை தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிடுகிறார். இவருக்கு 597 கோடி சொத்து உள்ளதாக தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்டின் மற்றும் அவரது மனைவி பெயரில் மெர்சிடஸ்பென்ஸ், டொயோட்டா வெல்பைர் ஆகிய இரு கார்கள் உள்ளிட்ட 339 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

35

சார்லஸ் மார்ட்டினுக்கு 20.59 லட்சமும் அவரது மனைவியிடம் ஒரு கோடியை 82 லட்சமும் பல்வேறு வங்கிகளில் 2.03 கோடியும், சுமார் 64க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் 74.28 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். வேட்பாளரிடம் 25.67 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும், அவரது மனைவியிடம் 5.35 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கமும், 44.87 கோடி மதிப்புலான வைரங்களும் அவரது மனைவியிடம் 2.10 கோடி மதிப்பிலான வைரங்களும், 3.77 கோடி ரூபாய் மதிப்புள்ளன வெள்ளியும், மனைவியிடம் ஒரு 1.68 கோடி ரூபாய் மதிப்பிலான வெள்ளியும், சார்லஸ் மார்டினுக்கு 38 கோடிக்கு கை கடிகாரங்களும், அவரது மனைவிக்கு 1.14 கோடி ரூபாய் மதிப்பிலான கைக்கடிகாரம் உள்ளது.

45

வேட்பாளருக்கு சென்னை பொன்னேரி மற்றும் இதர இடங்களில் உள்ள விவசாய அல்லாத நிலங்களில் தற்போதைய சந்தை மதிப்பு 192 கோடியே 50 லட்சம் ரூபாய் ஆகும். குடியிருப்புக்கு கட்டிடங்களின் சொத்து மதிப்பு 76.64 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவே அசையா சொத்துக்களின் சொத்து மொத்த மதிப்பு 269 கோடி ரூபாய் ஆகும். வேட்பாளருக்கு வங்கி மற்றும் இதர நிதி நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் கடன் பொறுப்புகள் உள்ளது. மொத்த கடன் அதாவது 210 கோடியே 79 லட்சம் ரூபாய். இதில் இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் கனரா வங்கியில் பெறப்பட்ட கடன்களும் அடங்கும்.

55

வேட்பாளர் மீது அமலாக்கத்துறை தொடர்பான உள்ளிட்ட 5 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழான புகார்களும் அடங்கும். இவர் 2006-ம் ஆண்டு சென்னையில் உள்ள புனித ஜான்ஸ் ஆங்கிலப் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்துள்ளார். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மொத்த சொத்து மதிப்பு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு 597 கோடி ரூபாயாகும். அதே சமயம் அவருக்கு 210 கோடி ரூபாய் கடன் இருப்பதும் பிரமாண பத்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் தற்போது வரை வெளியிடப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தான் அதிக சொத்துக்கள் கொண்ட வேட்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் லாட்டரி அதிபர் மாரட்டினின் மகன். 

Read more Photos on
click me!

Recommended Stories