காரைக்காலில் நடைபெற்ற மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழாவைத் தொடர்ந்து, மாணவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு இது பொருந்தாது.
தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த 14ம் தேதி அதாவது போகி பண்டிகை முதல் 18ம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதாவது மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தால் பள்ளி மாணவர்கள் முதல் ஆசிரியர் வரை குஷியில் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
24
கார்னிவல் விழா
அதாவது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் பகுதியில் கடந்த 3 நாட்களாக மலர் கண்காட்சி மற்றும் கார்னிவல் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்ககளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கண்டு ரசித்தனர். நேற்று இறுதி நாள் கூட்டம் அலைமோதியது.
34
இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நாஜிம் எம்எல்ஏ கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதே நேரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் நடைபெறும் பட்சத்தில் இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் இந்த விடுமுறை ஈடுசெய்யும் விதமாக வேலை நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.