டிட்வா புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற அறிவிப்பு தமிழகத்திலும் வெளியாகலாம்.
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையில் ருத்தரதாண்டவம் ஆடியது. பெரு மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பொருள் சேதம், உயிர் சேதம் என இலங்கை நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி போட்டது. புயலால் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இலங்கையில் இருந்து டிட்வா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வந்தது.
24
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கனமழை வெளுத்து வாங்கியது. அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை ஊத்தியது. இதன் காரணமாக குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தொடர் கனமழையை அடுத்து சென்னை, புதுச்சேரிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன.
34
புதுச்சேரி பள்ளிகளுக்கு விடுமுறை
இந்நிலையில் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி டிட்வா புயலால் புதுச்சேரியில் கடந்த வாரம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு நேரம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை பள்ளிகள் செயல்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.