
நீரிழிவு, மலச்சிக்கல், முடி உதிர்தல் பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வெந்தய நீர் ஒரு அருமருந்து என்று நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு பிறகு மறுநாள் அந்த நீரை குடித்து வந்தால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை விரிவுப்படுத்துவது மட்டுமின்றி, ரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்கும். அதுவும் குறிப்பாக கோடை காலத்தில் வெந்தய நீரை குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த நீர் வாயு பிரச்சனையையும் சரி செய்ய உதவுகிறது.
ஆனால், இந்த சிறப்பு பானம் அனைவருக்கும் நன்மை பயக்காத்ஜு என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், வெந்தய தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நுகர்வு உடலுக்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். எனவே, இந்த பதிவில் வெந்தய தண்ணீரை யாரெல்லாம் குடிக்கக் கூடாது? அது ஏன் என்று இங்கு தெரிந்துகொள்ளலாம்.
வெந்தயத்தின் ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை உள்ளன.
இதையும் படிங்க: வெந்தயத்தை தினமும் இப்படி சாப்பிடுங்க! பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்!
வெந்தயத் தண்ணீரை யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
ஒவ்வாமை பிரச்சினை உள்ளவர்கள்:
வெந்தயம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இத்தகையவர்கள் வெந்தய தண்ணீர் குடித்தால் தோலில் வெடிப்பு, அரிப்பு வீக்கம் மற்றும் சிவந்து காணப்படுதல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் வெந்தயத்தின் ஒவ்வாமை காரணமாக சிலருக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, வெந்தய தண்ணீரால் தோல் ஒவ்வாமை மட்டுமல்ல சுவாசிப்பதில் சிரமம் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். எனவே உங்களுக்கு வெந்தயத்தால் ஒவ்வாமை ஏற்படும் பிரச்சனை இருந்தால் வெந்தய தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
வாயு மற்றும் அஜீரணம்:
வெந்தய நீர் குடித்த பிறகு சிலருக்கு அஜீரண கோளாறு ஏற்படும். இதனால் அவர்கள் வாயு, வயிற்றில் புளிப்பு, ஏப்பம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் சில சமயங்களில் சிலருக்கு வெந்தய நீரானது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். எனவே நீங்களும் வெந்தய நீர் குடித்த பிறகு இதுமாதிரியான பிரச்சினைகளை எதிர்கொண்டால் இனி அதை குடிக்க வேண்டாம்.
மூச்சுத் திணறல் உள்ளவர்கள்:
சிலருக்கு வெந்தய தண்ணீர் குடித்த உடனேயே மூச்சுத் திணறல் ஏற்படும். காரணம் இவர்களுக்கு வெந்தயம் ஒத்துப் போவதில்லை. வெந்தயத்தின் ஒவ்வாமையானது சுவாசிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உறுப்புகளை பாதிக்கும். எனவே உங்களுக்கு ஏற்கனவே மூச்சு திணறல் பிரச்சனை இருந்தால் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசித்த பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரத்த சர்க்கரை குறைவுள்ளவர்கள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தய நீர் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும். இருந்தாலும் வெந்தய நீரை அளவுக்கு அதிகமாக குடித்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கணிசமாக குறைந்து விடும். எனவே சர்க்கரை நோயாளிகள் வெந்தய நீர் குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.
கர்ப்பிணிகள்:
கர்ப்பிணி பெண்களுக்கு வெந்தய நீர் நல்லதல்ல. ஏனெனில் வெந்தய நீரை கர்ப்பிணி பெண்கள் குடிக்கும்போது அது சில சமயங்களில் சில பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுத்தும் அபாயம் அதிகம் உள்ளது என்று ஆய்வு கண்டறிந்துள்ளனர். முக்கியமாக வெந்தய நீர் மற்றும் வெந்தயத்தில் இருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை உணவில் சேர்க்கும் போது இது கரு சிதைவுக்கு ஒரு காரணமாக அமைகிறது. ஒருவேளை கர்ப்பிணிகள் வெந்தய நீர் குடிக்க வேண்டு என்றால் முதலில் மருத்துவரிடம் தான் ஆலோசிக்கவும்.
இதையும் படிங்க: வெந்தயத்தின் அற்புத பலன்கள் தெரியும்.. ஆனா யாரெல்லாம் சாப்பிட்டா பிரச்சனைனு தெரியுமா?