இரவு சாப்பிட்ட உடனே மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்யாதீங்க!! காரணம் இதுதான்!

First Published | Oct 1, 2024, 6:42 PM IST

Post Dinner Mistakes : இரவு உணவு சாப்பிட்ட பிறகு உடனே செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அது என்ன? அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.

Post Dinner Mistakes In Tamil

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலர் உடல் பருமன், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், தைராய்டு, கொலஸ்ட்ரால் போன்ற பல நோய்களால் அவதிப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு சென்றாலும் கூட, அங்கு மருத்துவர்கள் சொல்லும் ஒரே விஷயம், ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள் மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்று தான் சொல்வார்கள்.

எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் இருப்பது தவறு என்றாலும், நாம் நம்முடைய வாழ்க்கையில் தினமும் செய்யும் சில விஷயங்கள் கூட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் தெரியுமா? அவற்றை சரி செய்து விட்டால், பாதி வியாதிகள் அடியோடு ஒழிந்து விடும் என்றே சொல்லலாம்.

Post Dinner Mistakes In Tamil

அந்த வகையில் நாம் செய்யும் சில விஷயங்களை பார்த்து வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அப்படி செய்யாதே,  இப்படி செய்யாதே என்று நம்மை நச்சரிப்பத்தை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள். உதாரணமாக, சாப்பிடும் போது வாயை திறந்து சாப்பிடாதே என்று சொல்லுவார்கள். காரணம் அப்படி சாப்பிடும்போது காற்று வாயின் உள்ளே போய்விடும் என்பார்கள். மேலும் சாப்பிடும் உணவை நன்றாக மென்று சாப்பிடு, அப்போதுதான் உணவு சீக்கிரமாக ஜீரணம் ஆகும் என்று சொல்வார்கள். 

அதுபோல நம்மில் பலர் வயிறு நிறைய சாப்பிட்ட உடனேயே தூங்குவார்கள். இன்னும் சிலரோ குளிப்பார்கள். மேலும் சிலர் புகை பிடிப்பார்கள். ஆனால் இப்படி நாம் சாப்பிட்ட பிறகு செய்யும் சில விஷயங்கள் தவறு என்று தெரியாமல் செய்கிறோம். இப்படி செய்வதனால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சரி இப்போது இரவு உணவு சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன. அது என்ன? அப்படி செய்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.

Tap to resize

Post Dinner Mistakes In Tamil

இரவு உணவு சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத விஷயங்கள் :

1. நடப்பது:

சிலர் இரவு உணவு சாப்பிட்ட பிறகு உணவு சீக்கிரமாகவே ஜீரணமாக வேண்டும் என்பதற்காக உடனையே நடைப்பயிற்சி செய்வார்கள். இரவு உணவுக்கு பிறகு நடைப்பயிற்சி செய்வது நல்லது தான். ஆனால் சாப்பிட்டு உடனேயே செய்வதுதான் தவறு. ஆம், சாப்பிட்டு உடனேயே நடைப்பயிற்சி செய்தால் கை, கால்களுக்கு ரத்தம் விரைவாக செல்லும். இதனால் செரிமானத்தில் குறிக்கிடுவதால் பிரச்சனை ஏற்படும். ஆகையால், இரவு சாப்பிட்ட உடனேயே நடைபயிற்சி செய்வதற்கு பதிலாக, ஒரு மணி நேரம் கழித்து நடக்கலாம்.

2. பழங்கள்:

இரவு உணவு சாப்பிட்ட பிறகு பழங்கள் சாப்பிடுவதை பலர் விரும்புகின்றனர். ஆனால் அது தவறு. ஏனெனில் அப்படி சாப்பிடுவதனால் வயிறு வீங்கும் மற்றும் வாயு பிரச்சனை ஏற்படும். இதனால் உணவு ஜீரணமாகாது.

Post Dinner Mistakes In Tamil

3. புகைப்பிடித்தல்:

பலர் இரவு உணவுக்கு பிறகு புகை பிடிப்பதை பழக்கமாக்கி உள்ளனர் ஆனால் அப்படி செய்யக்கூடாது. அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு கூட உள்ளது. உங்களுக்கு தெரியுமா மற்ற நேரங்களை விட, இரவு உணவு சாப்பிட்டு பிறகு புகை பிடிப்பது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கச் செய்யுமாம். எனவே இரவு உணவுக்கு பிறகு ஒருபோதும் புகை பிடிக்க வேண்டாம்.

4. டீ அல்லது காபி:

பெரும்பாலானோர் இரவு உணவுக்குப் பிறகு உடனே டீ அல்லது காபி குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் உண்மையில் இப்படி குடிப்பதால் செரிமானம் மோசமாக பாதிக்கப்படும். இதனால் வாயு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் கிடைப்பதில்லை. ஆகவே, இரவு சாப்பிட்ட பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.

Post Dinner Mistakes In Tamil

5. தூங்குவது

பலர் இரவு உணவுக்குப் பிறகு உடனே தூங்க விரும்புகிறார்கள் இப்படி செய்தால் செரிமான பிரச்சனை மோசமாக பாதிக்கப்படும். வாயு, அமிலத்தன்மை அதிகரிக்கும். சாப்பிட்ட உணவு கொழுப்பாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது இதனால் எடை கூடும் எனவே சாப்பிட்ட உடனேயே தூங்க செல்ல வேண்டாம். சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து தூங்குவது தான் நல்லது.

6. பல் துலக்குவது:
பலருக்கும் இரவு உணவுக்குப் பிறகு உடனேயே பல் துலக்கும் பழக்கம் உண்டு ஆனால் இது தவறு. இதனால் பற்களில் உள்ள எனாமல் தேய்ந்து போகும் மற்றும் பற்கள் பொலிவை இழக்கும். ஆகையால் சாப்பிட்ட உடனேயே ஒருபோதும் பல் துலக்க வேண்டாம். 30 நிமிடங்கள் கழித்து தான் விளக்க வேண்டும்.

இதையும் படிங்க:  மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! காரணம் தெரியுமா..?

Post Dinner Mistakes In Tamil

7. தண்ணீர்:

தண்ணீர் நம்முடைய உடலை நீரேற்றமாக வைப்பது என்பதால் அது மிகவும் அவசியம் தான். ஆனால் அதை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஆம் நாம் இரவு சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால், உணவு செரிமானம் செய்யும் வேலை தடுக்கப்படும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே, சாப்பிட்ட பிறகு குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

8. குளிப்பது:

இரவு சாப்பிட்ட பிறகு உடனே குளிப்பது நல்லது அல்ல. இதனால் ரத்தம் செரிமான மண்டலத்திற்கு போவது தடுக்கப்படுவதால், செரிமானம் சீராக நடப்பதில்லை.

இதையும் படிங்க:  உணவு சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

Latest Videos

click me!