உணவு சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
Jaggery Benefits : சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
வெல்லம் சர்க்கரை விட ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்று நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில், நாம் உணவு சாப்பிட்ட பிறகு சிறு துண்டு வெல்லம் சாப்பிடுவது வழக்கத்தில் உள்ளது. இது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இப்போது இதன் நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
செரிமானத்திற்கு மிகவும் நல்லது : சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமான நொதிகளை செயல்படுத்தும். மேலும் இதன் காரணமாக உணவானது எளிதில் உடைந்து விரைவில் ஜீரணமாகிவிடும்.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது : வெல்லத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்ததுள்ளது. இது உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கட்டுப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். அதுமட்டுமின்றி, நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
வளர்ச்சியை மாற்றத்தை அதிகரிக்கும் : சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிட்டால் உடலில் மெட்டபாலிசம் வேகமாகவும், வலுவாகவும் இருக்கும். இதனால் எடையை சுலபமாக கட்டுப்படுத்தலாம்.
நச்சு நீக்கி : வெல்லத்தில் இயற்கையாகவே நச்சுக்களை நீக்கும் பண்புகள் உள்ளது. இது நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலை சுத்தப்படுத்தும்.
இரத்த சோகைக்கு நல்லது : வெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ரொம்பவே நல்லது.
மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் : நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், தொடர்ந்து வெல்லம் சாப்பிடுங்கள். விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் : வெல்லத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், இது நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.