பழங்களில் பல வகைகள் உள்ளது. கோடை காலம், குளிர் காலம் என ஒவ்வொரு சீசனுக்கு ஏற்றார் போல சீசன் பழங்கள் ஏராளமானவை உள்ளன. அவற்றில் ஒன்றுதான் நாவல் பழம் பொதுவாக இந்த பழம் மே ஜூன் மாதங்களில் தான் அதிகமாக கிடைக்கும். இந்த பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் பலம் மட்டுமின்றி, அதன் கொட்டை, இலை, வேர் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது என்று சொல்லப்படுகின்றது.
நாவல் பழத்தின் ஊட்டச்சத்துக்கள் :
நாவல் பழத்தில் ப்ரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிருக்ட்ரோஸ், க்ளுகோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் பலவிதமான நோய்களுக்கு அருமருந்தாகும்.