பழங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது தான். ஏனெனில், இதில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நார்ச்சத்துக்கள் உள்ளன. மேலும் சில பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாகவே இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கண்டிப்பாக அதிக இனிப்பான பழங்களை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும். காரணம், சர்க்கரை அதிகம் உள்ள பழங்களில் கலோரிகளும் அதிகமாகவே இருக்கும். இதனால் தான் அவற்றை சாப்பிடுவது தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் எந்தெந்த பழங்களை சாப்பிட கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.
27
வாழைப்பழம் :
வாழைப்பழம் அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றாகும். இதில் சத்துக்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அதே அளவுக்கு சர்க்கரை மற்றும் கலோரிகள் உள்ளன. ஒரு பெரிய வாழைப்பழத்தில் மட்டும் கலோரிகள் 150 மேலுக்கும் இருக்கும். 30 கிராமுக்கு மேல் கார்போஹைட்ரேட் உள்ளன.
37
மாம்பழம் :
மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது இதனால் தான் இது முக்கனிகளில் முதலிடத்தில் உள்ளன. மாம்பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் தவிர சர்க்கரையும், கலோரிகளும் அதிகமாகவே உள்ளன. இதனால்தான் சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதுபோல எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் செர்ரி பழங்கள் பார்த்ததால் சிறியதாக இருக்கும். ஆனால் இதில் அதிகளவு சர்க்கரை உள்ளன. எனவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் செர்ரி பழங்கள் சாப்பிடுவது தவிர்க்கவும் அல்லது குறைத்து கொள்வது தான் நல்லது. இதற்கு பதிலாக ஸ்ட்ராபெரி போன்ற பெர்ரி வகை பழங்களை சாப்பிடலாம். இவற்றில் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் சர்க்கரை குறைவாகவும் உள்ளன.
57
பலாப்பழம் :
பலாப்பழத்தில் எந்த அளவிற்கு இனிப்பு அதிகமாக இருக்கிறது அதை அளவுக்கு கலோரிகளும் உள்ளன. எனவே எடையை குறைக்க நினைப்பவர்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் பெஸ்ட் சாய்ஸ் அல்ல. ஏனெனில் 100 கிராம் பலாப்பழத்தில் 100 கிராம் கலோரிகள் உள்ளன. கார்போஹைட்ரேட் 24 கிராம் அளவு மட்டுமே இருக்கிறது. இதனால்தான் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இந்த பழத்தை சாப்பிட கூடாது என்று சொல்லப்படுகின்றது.
67
சப்போட்டா பழம்
சப்போட்டா பழத்தில் இனிப்பு சுவை மற்றும் கல்லூரிகள் அதிகமாகவே உள்ளன. எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இந்த பழம் நல்லதல்ல. ஆனால் எடையை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் தினமும் 1-2 சப்போட்டா பழம் சாப்பிடலாம்.
77
அவகேடோ :
அவகேடோ பழத்தில் இனிப்பு இல்லை என்றாலும் அதில் கலோரிகள் அதிகமாக உள்ளன. ஒருவேளை இந்த பழத்தை நீங்கள் சாப்பிட விரும்பினால் அதை ஸ்மூதியாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இல்லையெனில் கலோரிகள் கூடிவிடும்.