Monsoon : மழைக்காலத்தில் ஆடைகள், ஷூவில் துர்நாற்றம் வீசுதா? இதை செய்தால் வாசனையா இருக்கும்

Published : Aug 11, 2025, 01:36 PM IST

மழைக்காலங்களில் ஆடைகள் மற்றும் ஷூவில் வீசும் துர்நாற்றத்தை போக்க சில எளிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
16
Prevent Fungus on Clothes During Rainy Season

பொதுவாக மழைக்காலத்தில் குளிர்ந்த காற்றின் ஈரப்பதம் காரணமாக அலைமாரிக்குள் பூஞ்சை மற்றும் காளான் குவிந்து துணிகளில் ஒரு விதமான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் தற்செயலாக மழை நீரில் ஷூ நனைந்தால் அதிலிருந்தும் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல், பாக்டீரியா வளர்ச்சியின் அபாயமும் அதிகரிக்கும். இந்த நாத்தம் வீடு முழுவதும் பரவுகிறது. எனவே, மழைக்காலத்தில் ஆடைகள் மற்றும் ஷூவில் வீசும் துர்நாற்றத்தை போக்க சில எளிய குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

26
பேக்கிங் சோடா :

மழைக்காலத்தில் துணிகளில் இருந்து நாற்றம் வீசுவதை தடுக்க சோப்பு நீரில் அல்லது திரவத்தில் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் துணி துவைத்த பிறகும் துணிகளில் இருந்து நாற்றம் அடிக்காது. வாசனை தான் வீசும். துணிகளை புத்துணர்ச்சியுடனும் வைக்கும். மேலும் ஈரமான வாசனையையும் அதிலிருந்து நீக்கிவிடும்.

36
சூடான நீர் :

மழை நீரால் ஆடைகள் மற்றும் காலணிகளில் வீசும் துர்நாற்றத்தை தடுக்க, சூடான நீரில் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து சிறிது நேரம் அவற்றில் ஊற வைத்து துவைக்க வேண்டும். இப்படி செய்தால் அவற்றிருந்து துர்நாற்றம் நீங்குவது மட்டுமல்லாமல் பாக்டீரியாக்கள், அழுக்குகள் நீங்க நன்கு சுத்தமாகும்.

46
வெள்ளை வினிகர்

மழைக்காலத்தில் உங்கள் ஷூ வில் அடிக்கும் துர்நாற்றத்தை போக்க ஒரு கப் வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவு எடுத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஷூ வில் தெளிக்கவும் பிறகு வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். இப்படி செய்தால் ஷூ வில் அடிக்கும் துர்நாற்றம் போய்விடும்.

56
எலுமிச்சை தோல் :

ஆம், நீங்க கேட்டது சரிதான் சில பழங்களின் தோல்களை ஷூ வில் வைத்தால் அது துர்நாற்றத்தை நீக்க உதவும். இதற்காக நீங்கள் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோல் பயன்படுத்தலாம். அதை இரவில் ஷூ வில் வைத்து பிறகு மறுநாள் காலையில் ஆகற்றி விடுங்கள். இப்படி செய்தால் ஷூ வில் இருந்து துர்நாற்றம் வீசாது.

66
இதில் கவனம்!

- மழைக்காலங்களில் ஆடைகள் மற்றும் காலணிகளை மழை நீரில் நனையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

- ஈரமான துணிகளை குவித்து வைக்காதீர்கள். அவ்வப்போது துவைத்து விடுங்கள்.

- துவைத்த துணிகளை நன்கு காயும் வரை எடுக்க வேண்டாம். மேலும் ஆடைகளை அயன் செய்த பிறகுதான் அலமாரியில் வைக்க வேண்டும். உண்மையில் அயன் செய்வது ஆடைகளில் இருந்து மீதமுள்ள ஈரப்பதத்தை நீக்கி, நாற்றம் ஏற்படுவதை தடுக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories