Kadai Egg : குழந்தைகளுக்கு காடை முட்டை கொடுங்க!! கோழி முட்டையை விட இதுக்கு சத்து அதிகம்!! முழுவிவரங்கள்

Published : Aug 11, 2025, 09:05 AM IST

காடை முட்டையில் உள்ள அற்புத ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.

PREV
16
Kadai Egg Health Benefits

இந்திய வீடுகளில் பெரும்பாலும் கோழி முட்டைகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காடை முட்டைகள் சாப்பிடுவதாலும், ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன என்பது பலருக்கும் தெரிவதில்லை. கோழி முட்டைகளை விட காடை முட்டைகள் பல வழிகளில் சிறந்தவை. இந்த பதிவில் காடை முட்டைகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகளை காணலாம்.

26
கோழி முட்டை vs காடை முட்டை

ஒரு கோழி முட்டையை ஒப்பிட்டால் காடை முட்டை மிகவும் சிறியது. ஒரு கோழி முட்டைக்கு இணையாக 3-4 காடை முட்டைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் இதில் கோழி முட்டையை விடவும் அதிகமான வைட்டமின் B1, வைட்டமின் B2, வைட்டமின் A ஆகியவையும், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுக்களும் உள்ளன.

36
ஊட்டச்சத்துக்கள்:

காடை முட்டைகளில் புரதம் அதிகம் உள்ளது. உடற்பயிற்சிக்கு பின் காடை முட்டைகள் உண்பது நல்லது. திசுக்களை உருவாக்கவும் சரிசெய்யவும் இவை உதவுகின்றன. இதில் வைட்டமின்கள் A, B12, D, E ஆகியவையும், இரும்பு, துத்தநாகம், செலினியம் ஆகிய தாதுக்களும் இருக்கின்றன.

46
குழந்தைகளுக்கு காடை முட்டை

காடை முட்டையில் நல்ல கொழுப்பு உள்ளது. மேலும் காடை முட்டையில் காணப்படும் அமினோ அமிலங்கள் குழந்தைகளுடைய வளர்ச்சிக்கும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சுவாச பிரச்சனைகளை குணமாக்க காடை முட்டை ஏற்றது.

56
இதய ஆரோக்கியம்

காடை முட்டைகளில் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா கொழுப்புகள் இருக்கின்றது. இதில் உள்ள இதயத்தை பராமரிக்க உதவும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன.

கண் ஆரோக்கியம்

காடை முட்டையில் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. லுடீன், ஜீயாக்சாண்டின் ஆகிய ஆக்ஸிஜனேற்றிகள் கண் ஆரோக்கியத்திற்கு நல்லது என மெடிசின்நெட் குறிப்பிடுகிறது. கூறுகிறது.

66
மற்ற நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி, ஒவ்வாமை நிவாரணம், சரும ஆரோக்கியம் பேண உதவும். தலைமுடிக்கு தேவையான ஊட்டம் அளிக்கும். சாத்தியமான நன்மைகள் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்கக்கூடும்.

கவனம்! கவனம்!

சிலருக்கு காடை முட்டை ஒவ்வாமையௌ ஏற்படுத்தலாம். இவை சத்தானவை என்றாலும், அவற்றை அதிகம் சாப்பிடக் கூடாது. சில உணவுகளுடன் எடுத்துக் கொண்டால் எடை அதிகரிக்கலாம் அல்லது மற்ற உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories