30 வயதுக்கு மேல் தசை வலிமை குறையாமல் இருக்க, அதிக புரதம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். முட்டை, சிக்கன், பருப்பு வகைகள், பாதாம், சோயா, பட்டாணி போன்ற உணவுகள் புரதத்திற்கு நல்ல ஆதாரங்கள். கூடுதலாக கொழுப்பு இல்லாத பால், தயிர், பன்னீர் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். புரதம் தசை வலிமையைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான சக்தியையும் அளிக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம், வைட்டமின் D
30 வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமடையும் அபாயம் அதிகரிக்கிறது. எனவே பால், தயிர், சீஸ், பச்சை இலைக் காய்கறிகள், மீன், எள் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் D நமக்கு சூரிய ஒளி மூலம் கிடைக்கிறது. இல்லையென்றால், சில வகையான உணவுகள், சப்ளிமெண்ட்ஸ் வடிவில் எடுத்துக் கொள்ளலாம். இது கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது.