இந்த நவீன காலத்துல பரபரப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை, மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சினைகள் மக்களிடையே நாளுக்கு அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை தான். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் பெரும்பாலானோர் கேஜெட்டுகளுடன் தான் அதிக நேரம் செலவிடுவதால் அவர்களது தூக்கம் பெரிதும் பாதிப்படுகிறது. குறைவான தூக்கத்தால் நாள் முழுவதும் சோர்வாகவும், ஆற்றல் இன்றி மனசோர்வுடனும் இருப்பர். மேலும் நீங்கள் தினமும் சரியாக தூங்கவில்லை என்றால் பல உடல் உள்ள பிரச்சனைகள் ஏற்படும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரவு படுத்த உடனே தூக்கம் வருவதற்கு சில வீட்டு வைத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை தூங்க செல்வதற்கு முன் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கம் வரும். இது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.