Kitchen Hacks: பூரி அதிக எண்ணெய் குடிக்கிறதா? சப்பாத்தி மாவு கருத்துப் போகுதா? இதோ சிம்பிள் டிப்ஸ்!

Published : Aug 27, 2026, 08:44 AM IST

சமையலறையில் நாம் தினமும் சந்திக்கும் சில பொதுவான பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகள் உள்ளன. பூரி அதிகம் எண்ணெய் குடிக்காமல் இருக்கவும், மீதமான சப்பாத்தி மாவு கருத்துப் போகாமல் தடுக்கவும் சில சூப்பர் டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

PREV
15
எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு
சமையலறையில் பெண்களுக்கு தினமும் ஏதாவது ஒரு சவால் காத்துக்கொண்டே இருக்கும். ஆனால், எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு தீர்வு உண்டு. உப்பு, காரம் கூடினால் என்ன செய்வது, பூச்சி பிடிக்காமல் பொருட்களை எப்படிப் பாதுகாப்பது போன்ற டிப்ஸ் தெரிந்தால், சமையல் வேலை சுலபமாகிவிடும்.
25
சப்பாத்தி போல இருக்கும் பூரி
நிறைய பேர் பூரி செய்வதற்கே பயப்படுவார்கள். காரணம், அது அதிக எண்ணெய் குடிக்கும் என்பதுதான். பூரியிலிருந்து வழியும் எண்ணெயைப் பார்த்தே, 'இந்த வம்பே வேண்டாம்' என ஒதுங்குபவர்களும் உண்டு.
35
ரி துளிக்கூட எண்ணெய் குடிக்காது
ஆனால், ஒரு சின்ன டிப்ஸை ஃபாலோ செய்தால், பூரி துளிக்கூட எண்ணெய் குடிக்காது. தொட்டுப் பார்த்தால் கூட கையில் எண்ணெய் ஒட்டாது. அந்தளவுக்கு சூப்பராக வரும்.
45
10 நிமிடம் நடக்கும் மாயாஜாலம்
பூரிக்கு மாவு பிசைந்து, உருட்டிய பிறகு, அதை ஒரு 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுங்கள். அதன் பிறகு எண்ணெயில் பொரித்தால், பூரி அதிகம் எண்ணெய் குடிக்காது, எண்ணெயும் வழியாது.
55
இனி காருக்காது.! அப்படியே இருக்கும்
சப்பாத்தி அல்லது பூரிக்கு பிசைந்த மாவு மீந்துவிட்டால், அடுத்த நாள் அது கருத்துப் போவதைப் பார்த்திருப்பீர்கள். இதைத் தவிர்க்க, மீதமான மாவின் மேல் சிறிது நெய் தடவி, காற்றுப் புகாத டப்பாவில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால், அடுத்த நாளும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories