
பெர்பியூம் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் வாசனை திரவியங்கள் உங்கள் மீது நறுமணத்தை வீசச் செய்யும். உங்களை சுற்றியுள்ளவர்களின் கவனம் உங்கள் மீது திரும்ப வாசனைதிரவியங்கள் உதவுகின்றன. ஆனால் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என தெரியவந்துள்ளது. நீங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக கவனித்துக் கொள்ள விரும்பினால், வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். வாசனை திரவியங்கள் ஏன் ஆபத்தானது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜமா நெட்வொர்க் ஓபன் (JAMA Network Open) செய்த ஆய்வில், வாசனை திரவியங்கள், வாசனைப் பொருட்கள் குழந்தைகளின் உடல்நலத்தை பாதிக்கும். நீங்கள் உபயோகிக்கும் வாசனை திரவியங்கள், நெயில் பாலிஷ்கள், முடி பராமரிப்புப் பொருட்களில் உள்ள வேதிப்பொருள்களை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பித்தலேட்ஸ் (phthalates) என்ற உள்ளடக்கம் காணப்படுகிறது. இதில் வெளியாகும் வாசனை உங்களை சிறப்பாக உணரச் செய்யும். ஆனால் இவை நெடுங்கால பயன்பாட்டில் உங்கள் உடலை பாதிக்கின்றன.
பித்தலேட்ஸ் பிரச்சனை என்ன?
இந்த இரசாயனங்கள் நீண்ட காலம் உபயோகிக்கும்போது உடலில் பிரச்சனை ஏற்படலாம். சிலருக்கு இன்சுலின் எதிர்ப்பு, இதய கோளாறுகள், குழந்தை வளர்ச்சிப் பிரச்சினைகள் ஏற்படும். இந்த குழு செய்த ஆய்வில் வாசனை திரவியம் போட்டுக் கொள்ளும் குழந்தைகள் கணிதம் உள்ளிட்ட பாடங்களில் சுமாராகவே தேர்ச்சி பெறுகின்றனர். மோசமான செயல்திறனைக் கொண்டிருக்கிறார்களாம்.
இதையும் படிங்க: பெர்ஃப்யூமின் முழு பயன்பாடும் கிடைக்க இதைச் செய்தால் போதும்..!!
உடல்நல பாதிப்பு:
வாசனை திரவியங்களில் உள்ள பித்தலேட்டுகள் குழந்தைகளின் நாளமில்லா அமைப்பை சீர்குலைத்து விடுகின்றன. இவை வளர்ச்சியை பாதிக்கிறது. அதுமட்டுமின்றி இனப்பெருக்க ஆரோக்கியம் கூட பாதிப்படைகிறது. இது ஹார்மோன்களில் பாதிப்பை உண்டு பண்ணலாம் எனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. உடலின் மொத்த சமநிலையும் சீர்குலையாமல் பராமரிக்க நாளமில்லா அமைப்பு சரியாக இயங்கவேண்டும். தைராய்டு, பிட்யூட்டரி ஆகியவற்றில் சுரக்கும் ஹார்மோன்கள்தான் உங்களுடைய வளர்சிதை மாற்றம், மனநிலை, இனப்பெருக்கம் போன்றவற்றை ஒழுங்கு செய்யும். இந்த ஹார்மோன்களை வாசனை திரவியங்கள் குறுக்கீடு செய்கின்றன. இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும்.
பரம்பரை பாதிப்பு:
ஒருவர் இந்த இரசாயனங்களால் பாதிக்கப்படும்போது அது எதிர்கால சந்ததியை கூட பாதிக்கும் வாய்ப்புள்ளது. தங்களுடைய பேரக்குழந்தைகள் கருவில் உருவாகும் முன்பே நோய்வாய்ப்படுவதை எந்த தாத்தா,பாட்டியும் விரும்பமாட்டார்கள். இந்த பாதிப்பை குறைக்க வாசனை திரவியங்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என காணலாம்.
இதையும் படிங்க: கழுத்தில் Perfume யூஸ் பண்ணா கழுத்து கருப்பா மாறுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
எப்படி வாசனை திரவியம் வாங்க வேண்டும்?
பித்தலேட்டுகள் இல்லாத வாசனை திரவியங்களை வாங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லது. அது சுற்றுச்சூழலையும் ஆதரிக்கும். பித்தலேட் இல்லாத தயாரிப்புகளை கவனித்து பார்த்து வாங்க வேண்டும். தாலேட் இல்லாத பெர்பியூம் உபயோகம் செய்வது உடலுக்கு பாதிப்பை உண்டாக்காது. மணமில்லா சலவை சவர்க்காரங்களை பயன்படுத்தலாம். உணவை சூடாக பிளாஸ்டிக் டப்பாக்களில் வைத்து உண்பதை தவிர்க்க வேண்டும். பித்தலேட் இல்லாத பெர்பியூம், அழகுசாதன பொருள்களை கவனித்து பார்த்து வாங்க வேண்டும். ஏபெல் வாசனை திரவியம், பசிபிகா பியூட்டி, பிரவுன் லிவிங் ஆகியவை சில பித்தலேட் இல்லாத பெர்பியூம்களாகும்.