கோடை காலம், குளிர் காலம் என எந்த பருவத்திலும் பலரது வீடுகளில் தொல்லையாகவும், அருவருப்பாகவும் இருப்பது ஈக்கள் தான். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் அவற்றின் தொல்லை இன்னும் அதிகமாகவே இருக்கும். ஈக்கள் ஆபத்தானவை அல்ல என்றாலும், அவை தொற்று நோய்களை பரப்பும். அவை உணவின் மீதோ, நம் மீதோ மொய்த்துக் கொண்டே இருந்தால் நமக்கு தொந்தரவாகவே இருக்கும். மேலும் ஈக்கள் மொய்த்த உணவை சாப்பிட்டால் ஃபுட் பாய்சன், வயிற்றுப்போக்கு போன்ற உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே வீட்டில் இருக்கும் ஈக்களை விரட்ட நாம் பல விஷயங்களை செய்தாலும் சில நிமிடங்களிலே அதை மீண்டும் வீட்டிற்குள் வந்துவிடும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பாருங்கள். இனி ஈக்கள் கூட்டம் உங்கள் வீட்டிற்குள் வரவே வராது.
24
Get rid of houseflies in tamil
கற்பூரம்:
கற்பூரத்தின் வாசனை ஈக்களுக்கு பிடிக்காது. எனவே உங்கள் வீட்டில் ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தால், கற்பூரத்தை ஏற்றி அதன் புகையை வீடு முழுவதும் பரப்புங்கள். இதனால் ஈக்கள் உடனே உங்கள் வீட்டை விட்டு ஓடி விடும்.
உப்பு:
இதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து ஆற வையுங்கள். பின் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அந்த தண்ணீரை ஊற்றி அதை வீடு முழுவதும் தெளித்தால் ஈக்கள் ஓடிவிடும்.
ஈக்களுக்கு வினிகரின் வாசனை பிடிக்காது. எனவே ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சிறிதளவு வினிகர் மற்றும் யூக்கலிப்டஸ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி, அதை ஈக்கள் வரும் இடத்தில் தெளித்தால் ஈக்கள் வீட்டிற்குள் வராது.
கிராம்பு:
இதற்கு ஒரு ஆப்பிளை இரண்டாக வெட்டி அதன் மேல் கிராம்பை நட்டு வைத்தால், ஈக்கள் அதிலிருந்து வரும் வாசனைக்கு வீட்டிற்குள் வராது.
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எலுமிச்சை சாறு, 2 ஸ்பூன் உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து அதை ஈக்கள் உள்ள இடத்தில் தெளித்தால் ஈக்கள் வீட்டை விட்டு ஓடிவிடும்.
புதினா அல்லது துளசி:
வீட்டில் இருக்கும் ஈக்களை விரட்டியடிக்க புதினா அல்லது துளசி இலைகள் உதவும். இதற்கு இவை இரண்டில் ஏதேனும் ஒன்றை பேஸ்ட் போல் அரைத்து அதை தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி ஈக்கள் அதிகம் இருக்கும் இடங்களில் தெளித்தால் ஈக்கள் வீட்டிலிருந்து ஓடிவிடும்.