MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மெத்தைல மூட்டை பூச்சிகள் தொந்தரவா? தடயமே இல்லாம விரட்ட '3' டிப்ஸ்

மெத்தைல மூட்டை பூச்சிகள் தொந்தரவா? தடயமே இல்லாம விரட்ட '3' டிப்ஸ்

Monsoon Bed Bugs : மழைகாலத்தில் உங்களது படுக்கையில் மூட்டை பூச்சிகள் இரவு தொந்தரவு செய்கிறதா? அவற்றை தடைமை இல்லாமல் விரட்டி அடிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 17 2024, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Monsoon Tips in Tamil

Monsoon Tips in Tamil

மழைகாலத்தில் கொசுக்கள், பூச்சிகள், ஈக்கள் தொல்லைகள் அதிகமாகவே இருக்கும். அதுவும் குறிப்பாக, இரவு நேரத்தில் படுக்கையில் மூட்டை பூச்சிகள் நம்மை தூங்கவிடாமல் இரவு பாடாய்படுத்தும். மூட்டைப்பூச்சிகள் என்பது ரத்தத்தை உறியும் ஒரு சிறிய பூச்சியின வகையாகும். மூட்டை பூச்சிகள் பொதுவாக ஆடைகள், பெட்ஷீட்களில் தான் அதிகமாகவே வரும். முக்கியமாக, மூட்டை பூச்சிகள் ரொம்பவே சிறிதளவில் இருப்பதால் நம்முடைய கண்களுக்கு தென்படுவது அரிதுதான். 

25
Monsoon Bed Bugs in Tamil

Monsoon Bed Bugs in Tamil

அதுமட்டுமின்றி, நீங்கள் சில சமயம் காலை எழுந்தவுடன் உங்களுக்கு சருமத்தில் அரிப்பு அல்லது உங்களது தோளில் சிவப்பு புள்ளிகள் ஏதேனும் தென்பட்டால் அதற்கு முக்கிய காரணம் மூட்டை பூச்சிகள். எனவே மூட்டை பூச்சிகளுக்கு ரொம்பவே எச்சரிக்கையாக இருங்கள். பொதுவாக மூட்டை பூச்சிகளை அகற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதால், பெரும்பாலானோர் அவற்றை விரட்ட இரசாயன பொருட்களை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவை உடல் நலத்திற்கு கேடு. அதுவும் குறிப்பாக குழந்தைகள், செல்லப்பிராணிகள் இருக்கும் வீட்டில் ரசாயன பொருட்கள் பயன்படுத்துவது நல்லதல்ல. இத்தகைய சூழ்நிலையில் படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சிகளை எந்தவித ரசாயனங்களுமின்றி, இயற்கையான வழியில் நிரந்தரமாக விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

35
Bed bug removal during monsoon in tamil

Bed bug removal during monsoon in tamil

மூட்டை பூச்சிகளை விரட்டி அடிக்க டிப்ஸ்:

பேக்கிங் சோடா:

மூட்டை பூச்சிகளை விரட்டுவதற்கு பேக்கிங் சோடா சிறந்த தேர்வாகும். இதை பயன்படுத்துவதன் மூலம் மூட்டை பூச்சிகள் இருக்கிற இடம் தெரியாமல் போகும். இதற்கு உங்களது மெத்தையில் பேக்கிங் சோடாவை தூவி விடுங்கள். பிறகு 3-4 நாட்களுக்கு அப்படியே வைத்து விடுங்கள். அதன் பிறகு வெற்றிட கிளீனரை பயன்படுத்தி மெத்தையை சுத்தம் செய்யவும். 

இதையும் படிங்க:  அரிசியில் வண்டு, பூச்சிகள் வராமல் தடுக்க சூப்பரான  '4'  டிப்ஸ்!!

45
Natural remedies for bed bugs during monsoon in tamil

Natural remedies for bed bugs during monsoon in tamil

வினிகர்:

வினிகர் மூட்டை பூச்சிகளை விரட்டியடிக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வினிகரை நிரப்பி அதை மெத்தையில் தெளிக்கவும். பிறகு ஈரமான துணியால் படுக்கையை துடைக்கவும். இப்படி செய்தால், மெத்தையில் இருக்கும் மூட்டை பூச்சிகள் செத்து மடியும். அதுமட்டுமின்றி, இனி பூச்சிகள் வரவே வராது. 

இதையும் படிங்க:  Kitchen Tips : வருடம் ஆனாலும் அரிசி, பருப்பில் வண்டு வராது.. ஸ்டோர் பண்ண சூப்பர் டிப்ஸ்!

55
5. Preventing bed bugs during monsoon in tamil

5. Preventing bed bugs during monsoon in tamil

தேயிலை மர அத்தியாவசிய எண்ணெய்:

மூட்டை பூச்சிகளை விரட்ட தேயிலை மர அத்தியாவசிய எண்ணெய் சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெய்யில் இருக்கும் பண்புகள் மூட்டை பூச்சிகளை கொல்லும். இதற்கு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் நிரப்பி அதில் 2-3 துளிகள் தேயிலை மர அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து, அதை படுக்கையில் தெளிக்கவும். இப்படி செய்தால் நிச்சயமாக படுக்கையில் இருக்கும் மூட்டை பூச்சிகள் வரவே வராது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved