
வெங்காயம் சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய காய்கறியாகும். பல்வேறு வகையான உணவுகளை தயாரிப்பதில் இது பயன்படுத்தப்படுகிறது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமின்றி, அது சாப்பிடுவதால் உடலுக்கு பலவிதமான நன்மைகளையும் வாரி வழங்குகிறது.
பலர் வெங்காயத்தை வெவ்வேறு வகையில் சாப்பிடுகிறார்கள். அதாவது சில உணவில் சேர்த்து சாப்பிடுகிறார்கள். இன்னும் சிலரோ வெங்காயத்தை காலை, மதியம் அல்லது மாலை வேளையில் பச்சையாகவே சாப்பிட விரும்புகிறார்கள். வெங்காயம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கினாலும் வெங்காயத்தை எப்படி, எப்போது சாப்பிட்டால் அதன் முழு பலன்களை நாம் பெற முடியும் என்று நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
வெங்காயத்தில் இருக்கும் சத்துக்கள்:
வெங்காயத்தில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின் சி, வைட்டமின் பி2, வைட்டமின் கே மற்றும் தயமின், சல்பர், ஆக்ஸிஜனேற்றிகள் உட்பட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதையும் படிங்க: வெங்காயத்தை சுத்தி கருப்பு அச்சு இருந்தால் சாப்பிடலாமா.. கூடாதா? தெரிஞ்சுக்கோங்க.!!
வெங்காயத்தை சாப்பிட சரியான நேரம் எது?
வெங்காயத்தை எந்த நேரத்திலும் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது தான். குறிப்பாக, வெங்காயத்தை பச்சையாக காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஏனெனில், அதில் இருக்கும் நச்சுத்தன்மை நீக்கும் பண்புகள் உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது வெங்காயம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, அதிலிருக்கும் சல்பர் கலவைகள் நொதி உற்பத்தியை அதிகரிக்க செய்வதால் நாள் முழுவதும் சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு வழிவகுக்கும்.
வெங்காயத்தை நீங்கள் மதியம் அல்லது இரவு உணவில் எடுத்துக் கொள்ளும் போது அதன் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை மேம்படுத்தும். ஏனெனில், வெங்காயத்தில் ப்ரீ பயாடிக்கல் உள்ளதால், அது வயிற்றில் நல்ல பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
வெங்காயத்தை எப்படி சாப்பிடுவது நல்லது?
வெங்காயத்தை எந்த நேரத்திலும் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் அதை பச்சையாகவா அல்லது சமைத்து சாப்பிடுவது அதிக பலன் தருமா என்று கேள்வி பலருக்கு உண்டு. உண்மையில், வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளில் வழங்குகிறது. அதாவது, பச்சை வெங்காயத்தில் அதிக அளவு வைட்டமின்கள் மற்றும் கந்தக கலவைகள் உள்ளன. அதே சமயம் வெங்காயத்தை சமைத்து சாப்பிட்டால் ஜீரணிக்க எளிதானது. ஆனால் வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதை விட அதை பச்சையாக சாப்பிட்டால் அதிக நன்மைகளை வழங்குமாம்.
வெங்காயம் சாப்பிட சரியான வழி என்ன?
வெங்காயத்தை நீங்கள் சாலட் பருப்பு காய்கறி அல்லது ரைத்தாவுடன் சேர்த்து சாப்பிட்டால், உங்களது உணவை மேலும் சத்துள்ளதாகும். அதுமட்டுமின்றி, வெங்காயத்தில் எலுமிச்சை சாறு பிழிந்து சாப்பிட்டால் இரும்பு மற்றும் பிற தாதுக்கள் உறிஞ்சுவதற்கு பெரிதும் உதவுகிறது. முக்கியமாக உடலில் கொழுப்பில் கரையக்கூடிய சத்துக்களை உறிஞ்சுவதை அதிகரிக்க வெங்காயத்தை நீங்கள் ஆலிவ் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: வெட்டிய வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்கிறீங்களா? இந்த நோய்கள் வரும் ஜாக்கிரதை!