ஜப்பானியர்கள் என்றாலே மெலிதான உடலமைப்பு மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் பெற்றவர்கள். ஆரோக்கியமான உணவுப் பழக்கம், கட்டுப்பாடு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவற்றின் மூலம் தங்கள் உடல் ஆரோக்கியத்தை ஜப்பானியர்கள் பின்பற்றி வருகின்றனர். ஆனால் ஜப்பானியர்கள் ஏன் உடல் எடை அதிகரிப்பதில்லை என்று உங்களுக்கு தெரியுமா?
பாம்பரிய ஜப்பானிய உணவுகள், பெரும்பாலும் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே ஜப்பானியர்கள் அதிகம் சாப்பிடுகின்றனர். மீன், அரிசி, காய்கறிகள் மற்றும் புளிக்கவைக்கப்பட்ட பொருட்கள் போன்ற பருவகால உணவுகளில் கவனம் செலுத்துகின்றனர். மீன்களில் இருந்து ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, பதப்படுத்தப்பட்ட உணவுகள் குறைவாக இருப்பதால் அது ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மைக்கு பங்களிக்கிறது.