நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பால், பேரீச்சம்பழக் கலவை நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. ஏனெனில் பாலிலும், பேரீச்சம்பழத்திலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. இது நம் உடலை பலவிதமான தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
எடை அதிகரிக்க உதவும்
மெலிந்தவர்களுக்கு, எடை அதிகரிக்க முயற்சிப்பவர்களுக்கு பாலும், பேரீச்சம்பழமும் உதவும். ஏனெனில் இந்த இரண்டிலும் சத்துக்கள், கலோரிகள் அதிகம் உள்ளன. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாலில் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் நீங்கள் எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதேபோல் பாலில் அதிகமாக உள்ள புரதங்கள் தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அவை வளரவும் உதவுகின்றன. அதேபோல் இதில் உள்ள வைட்டமின் சி நம் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது.