walking tips in tamil
நடைபயிற்சி என்பது உடலின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத மிதமான பயிற்சியாகும். உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் இந்த பயிற்சி உதவியாக உள்ளது. ஆனால் உடல் எடையை குறைப்பதற்கு வேகமாக நடக்க வேண்டும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மெதுவாக நடப்பது அந்த அளவுக்கு பலனளிப்பது இல்லை என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உள்ளது. இந்த பதிவில் மெதுவாக நடப்பது உடல் எடையை குறைக்க உதவுமா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
Benefits of slow walking for weight loss in tamil
மெதுவாக நடப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது என கொலராடோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒருவர் 1 மணி நேரத்தில் 3 முதல் 4 மைல்கள் மிதமான வேகத்தில் நடைபயிற்சி செய்வதை காட்டிலும், அதே 1 மணி நேரத்தில் வெறும் 2 மைல்கள் மெதுவாக நடப்பவர்கள் அதிக கலோரிகளை எரிக்கிறார்களாம். மெதுவாக நடப்பதன் பலன்களைக் குறித்து இங்கு காணலாம்.
Slow walking for weight loss in tamil
கொழுப்பு கரையும்:
மெதுவாக நடப்பதால் அதிக கலோரிகளை எரிக்க முடிகிறது. வேகமாக நடப்பதைக் காட்டிலும் மெதுவாக நடப்பதன் மூலம் அதிக கொழுப்பை உடல் ஆற்றலாக எடுத்துக் கொள்ளும். இதனால் கொழுப்பு குறைகிறது.
மிதமான பயிற்சி:
மெதுவான வேகத்தில் நடந்தால் விரைவில் சோர்வு வராது. உற்சாகமாக அதிக நேரம் நடக்கலாம். மெதுவாக நடக்கும்போது மனநிலை சீராகி மனநலம் மேம்பட உதவுகிறது.
எடை குறையும்:
மெதுவாக நடந்தால் கொழுப்பு குறைந்து எடையை குறைக்க உதவும். அதிக ஆற்றல் செலவாகும் என்பதால் எடையை கட்டுக்குள் வைக்கலாம். அனைத்து வயதினரும் நடைபயிற்சி செய்யலாம்.
Weight loss tips for slow walkers in tamil
மெதுவான நடைபயிற்சி எவ்வாறு கொழுப்பை குறைக்கும்?
மெதுவாக நடக்கும்போது உடலில் உள்ள கொழுப்பு தான் உங்களுக்கு ஆற்றல் அளிக்கிறது. தினமும் மெதுவாக நடந்தால் உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பு படிப்படியாக குறையும். ஒவ்வொரு நாளும் உணவுக்கு பின் மெதுவாக நடந்தால் செரிமானம் மேம்படும். உங்களுடைய எடையை கட்டுப்படுத்த உதவும்.
இதையும் படிங்க: தினமும் வெறுங்காலுடன் நடந்தால் என்னாகும்? வாக்கிங் போறவங்க அறியாத தகவல்!!
Weight loss walking routine in tamil
எப்போது நடக்கலாம்?
காலையில் நடைபயிற்சி செய்வது உடல் எடையை குறைக்க உதவும். எடை குறைக்க மெதுவாக வாக்கிங் செல்ல நினைத்தால் வாரத்தில் 5 நாட்கள் நடக்கலாம். குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் நடக்கலாம். வெறுமனே மெதுவாக நடக்காமல் அவ்வப்போது மலை போன்ற சாய்வான பகுதியில் நடக்க வேண்டும். இப்படி நடந்தால் உங்கள் தசை வலுவாகும். பிட்டம், தொடை தசைகள் நன்கு செயல்படும்.
இதையும் படிங்க: வாக்கிங் மூளையை பாதிக்குமா? இந்த 'ட்விஸ்ட்' யாருக்கும் தெரியாது!!