முகம் பளபளப்பாக இருக்க யாருக்கு தான் பிடிக்காது. இளம் வயது வாலிபர்கள் முதல் வயதானவர்கள் வரை என அனைவரும் முகம் பளபளப்பாக இருப்பதைத் தான் விரும்புவார்கள். இதற்காக பலர் பலவிதமான முயற்சிகளை செய்திருப்பார்கள். சிலரோ சந்தையில் விற்கப்படும் கண்டதையெல்லாம் வாங்கி முகத்தில் பயன்படுத்துவார்கள். ஆனால், அவற்றால் எந்த பயனுமில்லை. காசு செலவானது தான் மிச்சம். எனவே, இவை எல்லாவற்றையும் விட, நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து பளபளப்பான முகத்தை பெற முடியும் தெரியுமா?
25
Glowing Skin Tips in Tamil
ஆம், நாள் முழுவதும் நீங்கள் ஓடி ஓடி உழைத்த பிறகு இரவு உங்களுக்காக நேரத்தை ஒதுக்குங்கள். அதாவது, நீங்கள் இரவு தூங்கும் முன் உங்களது முக பராமரிப்பிற்கு சுமார் 10 நிமிடம் மட்டும் கொடுத்தால் போதும். சில எளிதான இரவு நேர சரும பராமரிப்பு குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உங்களது முகத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்ற முடியும். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பச்சை பால் சருமத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் பாலில் இருக்கும் லாட்டிக் அமிலம் சருமத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் சருமத்தில் இறந்த செல்களை அகற்றவும் உதவுகின்றது. இதற்கு ஒரு கிண்ணத்தில் பச்சை பாலை எடுத்துக் கொள்ளுங்கள் பிறகு ஒரு பருத்தி உருண்டையை அதில் நனைத்து, அதைக் கொண்டு உங்கள் முகத்தில் நன்றாக துடைக்க வேண்டும். பிறகு சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவுங்கள்.
தேங்காய் எண்ணெய்:
குளிர்காலத்தில் உங்களது சருமத்தை மென்மையாகவும், நீரேற்றுமாகவும் வைக்க தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதற்கு 2-3 சொட்டு தேங்காய் எண்ணெயை உள்ளங்கையில் நன்றாக தேய்த்து, பிறகு உங்கள் கைகளால் முகத்தில் மெதுவாக தடவ வேண்டும். இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு காலையில் முகத்தை கழுவுங்கள்.
45
Bedtime skincare routine in tamil
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது சருமத்திற்கு ஊட்டமளித்து, பளபளப்பாக வைக்க உதவுகிறது. எனவே தூங்க செல்வதற்கு முன் சில துளி பாதாம் எண்ணெயை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அப்படியே வைத்துவிட்டு காலையில் முகத்தை கழுவி விடுங்கள்.
கற்றாழை ஜெல்:
கற்றாழை ஜெல்லில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவுகின்றது. இதற்கு பிரஷ்ஷான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட்டு, பிறகு காலையில் கழுவ வேண்டும்.
55
face masks for glowing skin in tamil
ரோஸ் வாட்டர்:
ரோஸ் வாட்டர் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கின்றது. மேலும் இது நல்ல டோனராகும். எனவே இதை உங்கள் முகத்தில் தடவி பிறகு ஒரு நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். இது தவிர, ரோஸ் வாட்டருடன் சிறிதளவு சந்தனத்தை சேர்த்து, பேஸ் பேக்காக போட்டு சுமார் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பின் தண்ணீரில் கழுவ வேண்டும்.