இதற்குத் தீர்வு என்ன?
- இந்த பிரச்சனையை தவிர்க்க நீங்கள் சாதாரண வெப்பநிலையில் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக, குளிர்ந்த நீரை குடிப்பதற்கு பதிலாக, குளிர்ச்சி போகும் வரை சூடான நீரை குடிக்க வேண்டும்.
- குளிர்காலத்தில் அதிகளவு டீ அல்லது காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டும். அதற்கு பதிலாக மஞ்சள் பால், சூடான சூப் போன்றவற்றை குடிக்கலாம்.
- உடல் குளிர்ச்சி ஆவதை தடுக்க காது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் அதை மூடி வைக்க வேண்டும். இதற்காக நீங்கள் கம்பளி தொப்பி பயன்படுத்தலாம்.
- குளிர்ந்த காற்று வீட்டிற்குள் வராதவாறு அறையின் கதவை மூடி வைக்க வேண்டும் இதனால் அறையில் வெப்பநிலை பராமரிக்கப்படும் மற்றும் குளிர் இருக்காது.
- குளிர்காலத்தில் பகல் நேரத்தில் வெயில் அடிக்கும் போது சிறிது நேரம் வெயிலில் இருக்கவும் இதனால் உடல் வெப்பமாகும் ரத்த நாளங்களும் திறக்கப்படுகின்றது.