
தேங்காய் எண்ணெய் பொதுவாக எல்லா வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. முக்கியமாக கேரளா போன்ற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் சில மாநிலங்களில் அதை தலைமுடிக்கு மட்டும் தான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெய் தலை முடி வளர்ச்சிக்கு மட்டுமின்றி சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
இப்படி பல பயன்பாடுகளுக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினாலும், குளிர்காலத்தில் இதை பயன்படுத்துவது சற்று தொந்தரவாகவே இருக்கும் என்று சொல்லலாம். ஏனெனில், குளிர்காலத்தில் குளிர்ச்சியின் காரணமாக தேங்காய் எண்ணெய் உறைந்து விடும். அதுவும் குறிப்பாக, கடுமையான குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். தேங்காய் எண்ணெயை பாட்டிலின் வாய்ப்பகுதி சின்னதாக இருந்தால் அதிலிருந்து தேங்காய் எண்ணெய்யை எடுக்க பாட்டிலை உருட்ட வேண்டியிருக்கும். அந்த அளவிற்கு தேங்காய் எண்ணெய் குளிர்ச்சியால் உருகிப் போய் இருக்கும். இந்த காரணத்திற்காக தான் பலர் குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் வாங்குவதை தவிர்க்கிறார்கள். நீங்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறீர்கள் என்றால், இன்று உங்களுக்காக சில ஹேக்குகளை பற்றி இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பின்பற்றினால் எவ்வளவு கடுமையான குளிரிலும் கூட தேங்காய் எண்ணெயை உறைவதை தடுக்க முடியும். அது என்ன என்பதை பற்றி இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சரியான இடத்தில் சேமியுங்கள்:
குளிர்காலத்தில் குளிர்ச்சி காரணமாக தேங்காய் எண்ணெய் உறைந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில் அது உறைவதை தடுக்க அதை சரியான இடத்தில் வைத்து சேமிப்பது மிகவும் அவசியம். எனவே குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெயை நீங்கள் உங்கள் வீட்டு கிச்சனில் இருக்கும் அடுப்பின் அருகே வைக்கலாம் அல்லது இன்வெர்ட்டர் மேலே வைக்கலாம். இது தவிர நீங்கள் மைக்ரோவேவ் மேல் வைத்தும் சேமிக்கலாம். ஏனெனில் நீங்கள் மைக்ரோவேவனை ஒரு நாளைக்கு பலமுறை பயன்படுத்தினால், அது சூடு அப்படியே இருக்கும். எனவே அதன் மேல் வைத்தும் சேமிக்கலாம். மேலும் உங்கள் வீட்டில் பயன்படுத்தாத தெர்மோஸ் பாட்டில் இருந்தால் அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி வைத்து சேமிக்கலாம்.
வேறு எஎண்ணெயை அதில் கலக்கவும்:
குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைவதை தடுக்க அதில் வேறு சிலை எண்ணெய்களையும் கலக்கலாம். அதாவது ஆலிவ் எண்ணெய் போன்ற சில நீங்கள் விரும்பி என்னை அதனுடன் சேர்க்கலாம். இதற்கு தேங்காய் எண்ணெயை முதலில் சூடாக்கி, அதில் நான்கில் ஒரு பங்கு நீங்கள் விரும்பிய எண்ணெயை சேர்க்கவும். இப்படி செய்தால் குளிர்காலம் முடியும் வரை தேங்காய் எண்ணெயை எந்தவித சிரமமின்றி பயன்படுத்தலாம்.\
இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயில் '1' ஸ்பூன் தேன் கலந்து யூஸ் பண்ணுங்க.. முக சுருக்கம் மறையும்!
சரியான பாட்டிலில் சேமிக்கவும்:
தேங்காய் எண்ணெய் குளிர்காலத்தில் உறையாமல் இருக்க அதை சரியான பாட்டிலில் சேமிப்பது மிகவும் அவசியம். குறிப்பாக நீங்கள் எப்போதுமே பரந்த பாய் பாட்டிலில் சேமிப்பது தான் நல்லது. ஏனெனில் தேங்காய் எண்ணெய் உறைந்தாலும் அதை அதிலிருந்து எளிதாக அகற்றி விடலாம். மேலும் நீங்கள் பீங்கான் ஜாடி, கண்ணாடி பாட்டில் போன்றவற்றிலும் தேங்காய் எண்ணெயை சேமிக்கலாம். ஏனெனில் இவற்றின் வெளிப்புறம் வெப்பநிலை உள்ளே உள்ள எண்ணெயை அதிகம் பாதிக்காது. இதன் காரணமாக குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைவது தடுக்கப்படும்.
இதையும் படிங்க: தினமும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை 'இப்படி' குடிங்க.. எண்டிங்கில்லாத நன்மைகள்!!
உறைந்த தேங்காய் எண்ணெயை உருக்குவது எப்படி?
தேங்காய் எண்ணெய் முழுவதுமாக கெட்டியாகி விட்டால் அதை பாட்டிலில் இருந்து வெளியே எடுக்க முடியாவிட்டால், முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு பாத்திரத்தை அடுப்பில் மீது வைத்து சூடாக்கவும். இப்போது தேங்காய் எண்ணெய் பாட்டிலை தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் வைக்கவும். தண்ணீரின் சூட்டால் பாட்டினுள் இருக்கும் எண்ணெய் எளிதில் உருகிவிடும். இது தவிர, ஹேர் டிரையர் வைத்தும் எண்ணெயை உருக்கி விடலாம். இதற்கு பாட்டினில் உள்ளே ஹேர் டிரையரைக் கொண்டு சிறிது சூடான காற்றை வீசுங்கள். எண்ணெய் உடனடியாக உருகிவிடும்.